Sunday, June 17, 2012

த்ரிஷாவுக்கு கல்யாணம்!

த்ரிஷாவுக்கு கல்யாணம்!

  நடிகை த்ரிஷா இந்த ஆண்டு இறுதிக்குள் கல்யாணம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். ஜோடி படத்தின் மூலம் சிறிய கேரக்டரில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. பிற்காலத்தில் நாயகியாக முன்னேறி, பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நாயகிகள் பட்டியலில் இடம்பிடித்த த்ரிஷா, போதையில் குத்தாட்டம், நிர்வாண குளியல் என பல சர்ச்சைகளையும் சந்தித்து விட்டார். தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்த த்ரிஷா, சமீபத்தில் இந்தி படம் ஒன்றிலும் நடித்தார். இதுவரை காதல் வலையில் சிக்காமல் இருந்து வந்த த்ரிஷா, இப்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாராம். இந்த‌ ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என தெரிகிறது.
திருமணத்திற்காக மாப்பிள்ளை வேட்டையில் த்ரிஷாவின் பெற்றோர் இறங்கியிருக்கும் அதே வேளையில் அம்மணி, பிராணிகளுக்கான பாதுகாப்பு இல்லம் ஒன்றை தொடங்க திட்டமிட்டிருக்கிறாராம். பிராணிகள் மேல் அதிக பிரியம் உள்ளவர் நடிக‌ை த்ரிஷா. பெங்களூரில் சாலையில் கிடந்த நாய்க்குட்டியை எடுத்து வந்து தனது வீட்டில் வளர்ந்து வரும் த்ரிஷா, பிராணிகள் நல அமைப்பின் தூதுவராகவும் உள்ளார். ஆதரவில்லாமல் பிராணிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த அவர் தனது நண்பர்களுடன் இணைந்து பிராணிகள் பாதுகாப்பு இல்லம் தொடங்க முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், நாட்டில் நிறைய பிராணிகள் உதவியின்றி இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம். ஆனாலும் முடிந்த அளவு அவைகளுக்கு உதவ திட்டமிட்டுள்ளேன். நண்பர்களுடன் இணைந்து பிராணிகள் பாதுகாப்பு இல்லம் துவங்க முடிவு செய்துள்ளேன், என்றார்.

6-ஆவது விஜய் அவார்ட்ஸ்-வென்றவர்கள் விபரம்

6-ஆவது விஜய் அவார்ட்ஸ்-வென்றவர்கள் விபரம்

விஜய் டிவி-ன் ஆறாவது விஜய் அவார்ட்ஸ் நேற்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் விருதுப் பெற்றவர்களின் பட்டியல்...
சிறந்த நடிகருக்கான ஆண்: விக்ரம் (தெய்வத் திருமகள்)
சிறந்த நடிகருக்கான பெண்: அஞ்சலி (எங்கேயும் எப்போதும்)
சிறந்த வில்லன்: அஜித் (மங்காத்தா)
சிறந்த நகைச்சுவை நடிகர்: சந்தானம் (சிறுத்தை)
சிறந்த துணை நடிகருக்கான ஆண்: சரத்குமார் (காஞ்சனா)
சிறந்த துணை நடிகருக்கான பெண்: உமா ரியாஸ் (மொளன குரு)
சிறந்த பொழுதுபோக்கு நடிகர்: தனுஷ் (மொத்த நடிப்புக்கான)
சிறந்த இசையமைப்பாளர்:  ஜி.வி.பிரகாஷ்(ஆடுகளம்)
சிறந்த பாடல்: யாத்தே யாத்தே (ஆடுகளம்)
சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (வாகை சூட வா - சாரா சாரா)
சிறந்த பெண் பாடகர்: சின்மயி ( வாகை சூட  வா - சாரா சாரா)
சிறந்த ஆண் பாடகர்: எஸ்.பி.பாலசுப்ரமணியன் (ஆடுகளம் - அய்யய்யோ)
ஆண்டின் சிறந்த தேடல்: ஜிப்ரான் ( வாகை சூட  வா)
சிறந்த அறிமுக நடிகர்: நானி (வெப்பம்)
ஆண்டின் சிறந்த குழு: ஆடுகளம்
சிறந்த இயக்குநர்: வெற்றிமாறன் ( ஆடுகளம் )
சிறந்த திரைப்படம்: எங்கேயும் எப்போதும்
சிறந்த திரைக்கதை எழுத்தாளர்: தியாகராஜன் குமாரராஜா(ஆரண்யகாண்டம்)
சிறந்த வசனகர்த்தா: சமுத்திரக்கனி (போராளி)
சிறந்த நடன அமைப்பு: சுசித்ரா (அவன் இவன் - தியா தியா டோல்)
சிறந்த கலை இயக்குநர்: சீனு ( வாகை சூட  வா)
சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்: திலீப் ( ஆரண்யகாண்டம் )
சிறந்த ஒளிப்பதிவாளர்: P.S.வினோத் ( ஆரண்யகாண்டம் )
சிறந்த எடிட்டர்: கிஷோர் ( எங்கேயும் எப்போதும் )
சிறந்த ஒப்பனை கலைஞர்:கோதண்டபானி(7-ஆம் அறிவு)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: அணுவர்தன்& மூர்த்தி ( 7-ஆம் அறிவு )

மக்களின் அபிமான (FAVORITE) விருதுகள்...
ஆண்டின் Fav பாடல்: என்னமோ ஏதோ(கோ)
ஆண்டின் Fav திரைப்பட: கோ
ஆண்டின் Fav ஹீரோ: அஜித் ( மங்காத்தா )
ஆண்டின் Fav இயக்குனர்: வெங்கட் பிரபு ( மங்காத்தா )

சிறப்பு விருதுகள்: 
சிறந்த பின்னனி இசை: யுவன் சங்கர் ராஜா( ஆரண்யகாண்டம் )
செவாலியே சிவாஜி கணேசன் விருது: எஸ்.பி.பாலசுப்ரமணியன் 
ஜூரி நகைச்சுவை விருது: கோவை சரளா (காஞ்சனா)
ஜூரி விருது: சாரா ( தெய்வத் திருமகள் )

பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட்!

பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட்!

இங்கிலாந்து நாட்டின் ரகசிய உளவாளி பாத்திரமான  'ஜேம்ஸ்பாண்ட்' உலக சினிமா வரலாற்றில் மிகவும் பிரபம். பியர்ஸ் பிராஸ்னனை தொடர்ந்து  தற்போது அப்பாத்திரத்தில்  டேனியல் கிரெய்க் நடித்து வருகிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டேனியல் கிரெய்க் நடிப்பில்  'குவாண்டம் ஆப் சோலாஸ்' வெளிவந்தது. அப்படத்தினை தொடர்ந்து  இந்த ஆண்டுதான் ஜேம்ஸ்பாண்ட்டின் புதிய படம் வெளிவர இருக்கிறது.

ஸ்கை ஃபால் (SKY FALL) என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஜேம்ஸ்பாண்ட் படவரிசையில் 23 -வது படமாகும். அதுமட்டுமின்றி இந்த ஆண்டுதான்  ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர் உருவாகி 50 ஆண்டுகள் துவங்குகிறது.

மிகுந்த பொருட் செலவில் உருவாகி வரும் 'ஸ்கை ஃபால்' படத்தை சாம் மெண்டிஸ் இயக்கி வருகிறார். சேவியர் பார்டெம் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் ஜூடி டென்ச், ரால்ப் பெயின்னஸ், ஆல்பர்ட் பின்னர் ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக நவோமி ஹாரிஸ், பெர்னிஸ் மர்லோகே ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தியாவில் கோவா, அஹமதாபாத், டெல்லி ஆகிய இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.

உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கும்  'ஸ்கை ஃபால்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அஜீத் படத்தில் நட்சத்திரக் கூட்டம்!

அஜீத் படத்தில் நட்சத்திரக் கூட்டம்!

'பில்லா 2' படத்திற்குப் பிறகு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்க இருக்கும் படத்தில் சில முக்கிய பாத்திரங்களில் நடிக்க பலரிடம் முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

விஷ்ணுவர்தன் படத்தின் படப்பிடிப்பு 31ம் தேதி மும்பையில் துவங்க இருக்கிறது. இது குறித்து ஸ்ரீ சத்ய சாயி மூவிஸ் நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட் இருக்கிறது.

முதல் முறையாக அஜித்குமாருடன் ஆர்யா இணைந்து நடிக்க உள்ளார். இவர்களுடன் நயன்தாரா மற்றும் தாப்ஸி நடிக்க உள்ளனர். 'பில்லா' வெற்றிப் பட கூட்டணி அஜித்குமார் - நயன்தாரா - விஷ்ணுவர்த்தன் - யுவன்சங்கர் ராஜா மீண்டும் இணைய உள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையை சுபா - விஷ்ணுவர்த்தன் இருவரும் இணைந்து எழுதி இருக்கிறார்கள்.

ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க அரவிந்த்சாமி மற்றும் பிருத்விராஜ் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

அரவிந்த்சாமி தற்போது மணிரத்னம் இயக்கிவரும் 'கடல்' படத்தில் வேடத்தில் நடித்து வருகிறார். அப்படத்தினை தொடர்ந்து இப்படத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சுபா வசனத்தில், பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்ய இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வருகின்ற 31ம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது.

அஜீத் - விஷ்ணுவர்தன் - ஆர்யா - அரவிந்தசாமி - பிருத்விராஜ் - நயன்தாரா - தாப்ஸி - யுவன்சங்கர்ராஜா என பல முன்னணி நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடித்தால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறும் என்பது தயாரிப்பாளர் கணக்கு.

அஜீத்துடன் போட்டி நல்லது! : விஜய்


அஜீத்துடன் போட்டி நல்லது! : விஜய்

'மங்காத்தா' படப்பிடிப்பில் அஜீத்தை விஜய் சந்தித்து பேசினாரோ அன்று முதல் விஜய்யும், அஜீத்தும் நல்ல நண்பர்கள் என்ற பேச்சுகள் அவர்களது ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக "அஜீத் எனது நண்பர்!" என்று பேட்டியளித்து இருக்கிறார் விஜய்.

அஜீத் உங்களுக்கு போட்டியா என்ற கேள்விக்கு " அஜீத்தும் நானும் தொடர்பில் இருக்கிறோம். நிறைய விஷயங்கள் குறித்து நாங்கள் இருவரும் பேசிக் கொள்வோம்.  நடித்து வரும் படங்கள் குறித்தும் பேசுவோம்.

அஜீத் வீட்டிற்கு நான் செல்வேன். அவர் என்  வீட்டிற்கு வருவார். எங்கள் இருவரது குழந்தைகளும் ஒரே பள்ளிக்கு செல்கின்றனர்.

சினிமாவில் எங்களுக்குள் கொஞ்சம்  நீயா நானா போட்டி இருக்கலாம். திரையுலகில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லதுதானே. ஆனால் நிஜத்தில் நாங்கள் நல்ல நண்பர்கள்!" என்று தெரிவித்து இருக்கிறார்.

பில்லா-2 Vs சகுனி !

பில்லா-2 Vs சகுனி !

'பில்லா 2' படத்திற்கும் 'சகுனி' படத்திற்கும் இடையே
கடும் போட்டி நிலவி வருகிறது.

'பில்லா 2'  ஜுன் 22ம் தேதியும், 'சகுனி' ஜுலை 6ம் தேதியும் வெளியாகும் என செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது உள்ள நிலவரப்படி 'சகுனி'  ஜுன் 22ம் தேதி வெளியாவது உறுதியாகி இருக்கிறது.

'சகுனி'  இன்று சென்சார் செய்யப்பட்டு, ஜுன் 22ம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டு, தியேட்டர் ஒப்பந்தம் செய்வதை தொடங்கி விட்டார்கள்.

'பில்லா 2', சகுனி இரண்டுமே ஒரே நாட்களில் வெளியாகி போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விநியோகஸ்தர்கள் மத்தியில் இரண்டு படங்களுமே ஒரே தேதியில் வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

நீண்ட நாட்கள் கழித்து ஒரு பெரிய ஓப்பனிங் இருக்கும் நாயகர்களின் படங்கள் வெளிவருவதால் எந்த படம் வெளிவந்தாலும் விநியோகஸ்தர்கள் காட்டில் பண மழை தான்.. தியேட்டர்காரர்களுக்கு சந்தோஷம் தான்.!

அஜீத்தின் அடுத்தடுத்த டைரக்டர்ஸ் !


அஜீத்தின் அடுத்தடுத்த டைரக்டர்ஸ் !



அஜீத் இப்போது  விஷ்ணுவர்தன், 'சிறுத்தை' சிவா ஆகியோரது இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விஷ்ணுவர்தன் படம் ஜுன் மாதம் துவங்க இருக்கிறது. அதற்குள் 'சிறுத்தை' சிவா படத்தினைப் பற்றிய தகவல்கள் வெளிவர தொடங்கி இருக்கின்றன.

'சிறுத்தை' என்கிற படத்தின் மூலம் கார்த்தியை விநியோகஸ்தர்கள் மத்தியில் வரவேற்புக்குள்ளாக்கியர் சிவா. படத்தின் வசூல் மழையால் தமிழ் திரையுலகில் 'சிறுத்தை' சிவா என்ற அடைமொழியோடு அழைக்க தொடங்கினார்கள். (அப்படம் 'விக்ரமாக்குடு' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்பது தனிக்கதை)

தற்போது ரவிதேஜா, டாப்ஸி ஜோடியில் 'தருவு' என்னும் படத்தினை இயக்கினார். பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'கபார் சிங்' படம் வெளிவந்து சில நாட்கள் கழித்து வெளிவந்தது 'தருவு'. எனினும்  'கபார் சிங்' தெறித்துக் கொண்டு ஓட, 'தருவு' தவழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அதற்குள் தமிழ் திரையுலகில் 'தருவு' படத்தின் ரீமேக்கில் தான் அஜீத் நடிக்க இருக்கிறார் என்றும், 'தருவு' தெலுங்கு பாக்ஸ் ஆபிஸில் சுருண்டதால் அஜீத் இவரது இயக்கத்தில் நடிக்க போவது இல்லை என்று செய்திகள் உலா வந்தன.

அச்செய்திகள் அனைத்தையும் மறுத்து இருக்கிறார் சிவா. அஜீத் நடிக்க இருக்கும் படத்தின் கதை வேறாம்." 'தருவு' படத்திற்கும் இப்படத்திற்கும்  எவ்வித சம்பந்தமும் இல்லை. விஷ்ணுவர்தன் படம் முடிவடைந்தவுடன் எனது படத்தில் அஜீத் நடிப்பது உறுதி" என்று தெரிவித்து இருக்கிறார்.

இப்படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வருகிறாராம் சிவா.