ஓவியாவுக்காக ஒரு மோதல்
டைரக்டர் & ஹீரோ தவிப்பு
'மனம் கொத்தி பறவை' ஹிட்டா, ஃபிளாப்பா என்று விநியோகஸ்தர் வட்டாரத்தில் கேட்டால் ஆமா... இல்ல... என்று
அவர்களே குழம்புகிறார்கள். சில ஏரியாக்களில் கல்லாபெட்டி நிரம்புச்சு. சில ஏரியாக்களில் பட்டாபட்டி கிழிஞ்சுச்சு என்பதுதான் நிஜமாம்.
ஆனால், ரிசல்ட் எதுவா இருந்தா என்ன? நம்ம
பயணம் நாலு கால் பாய்ச்சலில் என்று அடுத்த படத்தை ஆரம்பிக்கப் போகிறார்
எழில். இதில் விமல் ஹீரோவாக நடிக்கப் போகிறார்.
பிள்ளையார் சுழி போடுகிற போதே பிரச்சனை
கிளம்பிவிட்டதாம். ஓவியாதான் ஹீரோயின் என்கிறாராம் விமல். ஐய்யே அதுவா, வேற
ஆளை பார்க்கலாமே என்கிறாராம் எழில்.
களவாணி. கலகலப்பு இரு படங்களிலும் ஓவியா
இருந்தார். சென்ட்டிமென்டாகவே அப்படங்கள் ஹிட். இதை அப்படியே தொடர்ந்தால்
டென்ஷன் ஃப்ரியாச்சே என்று நினைக்கிறாராம் விமல். அதனால்தான் இத்தனை
பிடிவாதமாம்.
வாதத்துக்கு மருந்து இருக்கு. பிடிவாதத்துக்கு?
No comments:
Post a Comment