Friday, June 15, 2012

வடிவேலு வந்துட்டாரு... சந்தானம் அலறிட்டாரு...

வடிவேலு வந்துட்டாரு...
சந்தானம் அலறிட்டாரு...

vadivelu - santhanam                                                                                            கிழட்டு சிங்கமா இருந்தாலும் கிடாப் பல்லு ஸ்டிராங்குன்னு நிரூபிச்சிருக்கார் வடிவேலு. படமே இல்லாமல் வீட்டிலிருக்கும் அவருக்கு ஆறுதலாக, அவர் எப்பவோ நடித்த 'மறுபடியும் ஒரு காதல்' என்ற படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதில்தான் நான் என்னைக்குமே சிங்கம்டா என்று மார் தட்டியிருக்கிறார் அவர்.
சிங்கம் கிளம்பிருச்சே, சிற்றுண்டியாவது மிச்சமிருக்குமா என்று பிற நடிகர்களை பதற வைத்திருக்கிறது அவரது ரீ என்ட்ரி. பல தமாஷ் நடிகர்களை க்ரஷ் பண்ணியிருக்கும் வடிவேலுவின் இந்த ரீ என்ட்ரி சந்தானம் விஷயத்தில் எப்படி? ஆ.வி பதில்களில் தானும் ஒரு வடிவேலு ரசிகன் என்பதை போலவே பதில்களை சொல்லி பேலன்ஸ் ஏர் ஓட்டியிருக்கிறார் சந்தானம். விட்டால் வடிவேலுவுடன் சேர்ந்து நடிக்க அழைத்தாலும் அவர் மறுக்க மாட்டார் போலிருக்கிறது.
இதற்கிடையில் சந்தானத்தின் இன்னொரு மாஸ்டர் பீஸாக உருவாகிக் கொண்டிருக்கிறது சேட்டை. இப்படத்தில் ஒரு சினிமா நிருபராக நடிக்கிறாராம் அவர். நடுப்பக்கத்தில் கிசுகிசு எழுதும் இவரது பெயர் நடுப்பக்க நக்கி!
நாகராஜ் என்கிற பெயரைதான் நக்கியாக சுருக்கிக் கொண்டிருக்கிறார் சந்தானம். படத்தில் யாரையெல்லாம் கழுவி எதிலெல்லாம் ஊற்றப் போகிறாரோ? இவரது கிண்டலில் நிருபர்களே சிக்கி சின்னாபின்னமாவார்கள் போல தெரிகிறது.
வாரமலர்- எலீசா, சினிமா பொன்னையா, தினத்தந்தி -ஆண்டிபண்டாரம், குருவியார், நக்கீரன்- கொக்கரக்கோ எல்லாரும், ஒரு எட்டு சந்தானத்தை பார்த்து எச்சரிச்சுட்டு வர்றது நல்லது!
                                                                                                                       

No comments:

Post a Comment