Friday, June 15, 2012

வியாபார உலகின் பிக் பிரதர்ஸ்
சூர்யாவும் கார்த்தியுமா?

Surya-Ajith-Karthi-Vijay

தமிழ்சினிமாவின் 'பிக் பிரதர்ஸ்' ஆகிவிட்டார்கள் சூர்யாவும் கார்த்தியும். 'சுண்டு'வாக்கிளி கார்த்தி, நண்டுவாக்கிளி அஜீத்தை எதிர்க்கிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை. பில்லா-2 ம், சகுனியும் ஒரே நாளில் வெளியாகப் போகிறதாம். அஜீத் ரசிகர்களை ஆக்ரோஷம் கொள்ள வைத்திருக்கும் இந்த ரிலீஸ், அடையப் போகும் லாபம் என்ன என்பதை இப்போதே கணித்துவிட முடியாது.

அடுத்து கோடம்பாக்கம் குமைந்து குமைந்து பேசிக் கொண்டிருப்பது இன்னொரு விஷயத்தை பற்றிதான். சூர்யா படமான மாற்றானின் வியாபாரம், விஜய்யின் துப்பாக்கி வியாபாரத்தை முந்திவிட்டதாம். அதுவும் பல கோடிகள்...

துப்பாக்கியை விட சுமார் 28 கோடி ரூபாய் அதிகமாக விற்பனையாகியிருக்கிறதாம் மாற்றான். கே.வி.ஆனந்த் என்ற இயக்குனரின் தனிப்பட்ட அந்தஸ்தும் இந்த வியாபாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆறுதல் கொள்ளும் விஜய் அபிமானிகள், தங்களுக்குள் கேட்டுக் கொள்ளும் இன்னொரு கேள்வி நியாயமானது. அப்படியென்றால் துப்பாக்கி இயக்குனர் முருகதாஸ், கே.வி.ஆனந்தை விட திறமையில் குறைவானவரா? இப்படி மாறி மாறி முட்டிக் கொள்கிறது அபிமானிகளின் மனசாட்சி.

No comments:

Post a Comment