Thursday, June 14, 2012

டேய் உங்களுக்கு வெட்கமில்லையா? தமிழர்கள் மீது கன்னட நடிகை ஆத்திரம்

டேய் உங்களுக்கு வெட்கமில்லையா?
தமிழர்கள் மீது கன்னட நடிகை ஆத்திரம்


வீரமங்கை வேலு நாச்சியார், ஜான்சிராணி லெவலுக்கு திவ்யா ஸ்பந்தனாஸ், தன்யா Dhanyaஆகிய இரு நடிகைகளையும் கர்நாடகா பெங்களூரு ஏரியாவில் மெச்சி, உச்சி குளிர்ந்தாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் அவர்கள் இருவருமே சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தமிழனின் உணர்ச்சியை கிடுகிடுக்க வைப்பார்கள். (சே...சே... அந்த மாதிரி இல்லீங்க, இது வேற)
காவிரி பிரச்சனை தலையெடுக்கும் போதெல்லாம் தமிழர்களுக்கு எதிராக பேசி வரும் நடிகை திவ்யாவுக்கு இப்போதும் கோடம்பாக்கத்தில் ரத்தின கம்பள விரிப்புதான். இனிமேல் தன்யாவுக்கும் கம்பளம் விரிப்பார்கள் போலிருக்கிறது. ஏனென்றால் தமிழர்களை லேட்டஸ்டாக கேவலப்படுத்தியிருக்கிறவர் இவர்தானே!
7 ஆம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி என்ற இரு தமிழ் படங்களில் நடித்திருக்கும் தன்யா ஃபேஸ்புக்கில் ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார். அதில், டியர் சென்னை. நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுத்தீர்கள். நாங்கள் கொடுத்தோம். நீங்கள் மின்சாரத்தை பிச்சை எடுத்தீர்கள். நாங்கள் கொடுத்தோம். எங்கள் அழகான நகரில் உங்கள் மக்கள் வந்து வசிக்க தொடங்கினார்கள். அதையும் அனுமதித்தோம். இப்போது ஐ.பி.எல்.லின் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லவும் எங்கள் தயவை எதிர்பார்த்தீர்கள். அதையும் கொடுத்துவிட்டோம். டேய் உங்களுக்கு வெட்கமே இல்லையாடா? என்று கொதித்திருக்கிறார்.
இவரது கருத்திற்கு எதிர் கருத்தை பதிவு செய்திருக்கும் ஏராளமான தமிழர்கள் தன்யாவை காறித்துப்பாத குறையாக கோபப்பட்டிருக்கிறார்கள். அப்புறம் எதற்கு தமிழ்சினிமாவில் நடிக்க கேட்டு பிச்சை எடுத்தே? என்ற இவர்களின் கேள்விக்கு பதிலளித்திருக்கும் தன்யா, இனிமேல் தமிழில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
ஃபேஸ்புக்கில் கொஞ்ச நாட்களாக நடந்து வரும் இந்த மோதல் கோடம்பாக்கத்து சுரணைப்புலிகளுக்கு தெரியுமா என்பதுதான் நமக்கு தெரியவில்லை.

No comments:

Post a Comment