Sunday, June 17, 2012

அக்ரிமென்ட் விலங்கு? அலறுகிறார் ப்ரணிதா

அக்ரிமென்ட் விலங்கு?
அலறுகிறார் ப்ரணிதா
                   தேன் கொழுக்கட்டையை வாயில வச்சுக்கிட்டே உறங்குன மாதிரி பேரவஸ்தை பட்டுக் கொண்டிருக்கிறார்      ப்ரணிதா .    இவர் சகுனி பட நாயகி.
இரண்டாவது படத்திலேயே கார்த்தி போன்ற பெரிய ஹீரோவுடன் நடிக்கிற வாய்ப்பு Pranithaசும்மாவா கிட்டும்? ஆனால் கிட்டிய வாய்ப்பே நெட்டியை முறிக்கிறதாம் இப்போது. இவரை புக் பண்ணும்போதே தொடர்ந்து மூணு படங்கள் எங்க கம்பெனியில்தான் நடிக்கணும் என்று ஒப்பந்தம் போட்டுவிட்டார்களாம் தயாரிப்பு தரப்பில். கார்த்தி பெரிய நடிகர். அழைப்பது பெரிய கம்பெனி. அந்த நேரத்தில் இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் நடக்காது என்று நினைத்து அக்ரிமென்ட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டாராம் ப்ரணிதா.
இப்போதுதான் அவசரப்பட்டு விட்டோமோ என்று அதிர்கிறாராம். அதற்கும் காரணம் இருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லரையும் ஸ்டில்களையும் பார்த்த தமிழ்சினிமா இயக்குனர்கள் பலர் பிரணிதாவை தங்கள் படங்களில் நடிக்க அழைக்கிறார்களாம். அக்ரிமென்ட் என்ற விலங்கு பின்னங்காலில் பூட்டப்பட்டு இருக்கிறதே, என்ன செய்வார்? 'கேன்சல் பண்ணுங்க ப்ளீஸ்' என்று கெஞ்சுகிறாராம்.
மார்கழி கோலம், அதுல மழை பெய்ஞ்சா பாவம்!

No comments:

Post a Comment