மரணத்தை விவரித்த நிருபர் -கண் கலங்கிய சனாகான்
சில்க் வியாபாரம் எப்பவுமே காஸ்ட்லிதான். புடவைக்கே
அப்படியென்றால், படவுலகத்தை ஆட்டிப்படைத்த 'சில்க்' எப்படியெல்லாம்
வியாபாரமாவார்? கன்னிமாரா லைப்பரரியை
கலைத்துப்
போட்ட மாதிரி ஆளாளுக்கு அவரது மெயின் கதையிலிருந்து ஏராளமான கிளை கதைகளை
சுட்டு சில்கின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
தென்னக மொழிகள் எல்லாவற்றிலும் தயாராகப் போகிறதாம் சில்க் கதை.
மலையாளத்தில் எடுக்கப்படவிருக்கும் சில்க்
கதைக்கு சனாகான்தான் ஹீரோயின் என்று சில தினங்களுக்கு முன்பே நமது
இணையத்தில் தெரிவித்திருந்தோம்.
அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள
சென்னைக்கே வந்திருந்தார் சனா. சில்க் பற்றி அவர் அறிந்ததைவிட,
இங்கிருக்கும் நிருபர்களுக்கல்லவா அதிகம் தெரியும்? மூத்த நிருபர் ஒருவர்
சில்க் இறந்த நாளில் என்ன நடந்தது என்பதை சனாவுக்கு திக் திக்கென
விவரித்தார். அந்த கொள்ளை அழகு சடலமாக தூக்கில் தொங்கிய கோலத்தை அப்படியே
அவர் விவரிக்க, சனாகான் முகத்தில் கவலை அப்பிக் கொண்டது.
சில்க் நடிச்ச எல்லா படங்களையும்
பார்த்துக்கிட்டு இருக்கேன். அவரது மேனரிசத்தை அப்படியே கொண்டு வரணும்னு
ட்ரை பண்ணுறேன். சில்க்கின் மரணக்காட்சி இப்படத்தில் இடம் பெறுமா தெரியாது.
எந்த இடத்திலேயும் விரசம் இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கார்
டைரக்டர். அவரது முக்கிய நோக்கமே இந்த படத்துக்கு யூ சர்டிபிகேட்
வாங்கணும்ங்கறதுதான். அழுத்தமாக சொல்கிறார் சனாகான்.
அதுவும் சரிதான். இறப்புக்கு பிறகாவது கவுரமாக வாழட்டும்...
No comments:
Post a Comment