சேட்டை பண்ணும் சந்தானம்!
ஆர்யா, சந்தானம், ஹன்சிகா, அஞ்சலி, நாசர், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். யு.டிவி நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது. 'ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை', 'வந்தான் வென்றான்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார்.
ஒரு பத்திரிகையாளர் வாழ்க்கையில் நடக்கும் சுவையான பரபரப்பான சம்பவங்களின் தொகுப்பு தான் கதை.
ஏற்கனவே இப்படத்தை இந்தியில் தயாரித்துள்ள யு.டிவி நிறுவனம் அமீர்கானிடம் முறையாக அனுமதி பெற்று கதை உரிமை வாங்கி தமிழில் தயாரிக்கிறது.
'இளைஞர்களைக் கவரும் உயிரோட்டமான கதையே படத்தின் பலம். அதை மாற்றாமல் தமிழில் கொண்டு வருகிறோம்' என்கிறார் இயக்குனர் கண்ணன்.
இந்தியிலிருந்து தமிழுக்கு என்னென்ன மாற்றாங்கள் செய்யப்படுள்ளன?
இது நல்ல கதை. அது பலமாக இருக்கிறது. தமிழில் கண்ணியமான வசனங்களுடன் காமெடி எவ்வளவு கலக்க முடியுமோ அந்த அளவிற்கு கலந்து இருக்கிறோம். நகைச்சுவையை பிரதானப்படுத்தி எடுத்து வருகிறோம் என்கிறார் இயக்குனர் கண்ணன்.
ஆர்யா பத்திரிகையாளர், பிரேம்ஜி கார்ட்டூனிஸ்ட், சந்தானம் நடுப்பக்கம் பொறுப்பேற்றுள்ள போட்டோகிராபர், அஞ்சலி ஆங்கிலப் பத்திரிகையின் பெண் நிருபர், ஹன்சிகா விமான பணிப்பெண். இவர்களைச் சுற்றி நிகழ்கிறது கதை. நாசர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அது என்ன என்பது சஸ்பென்ஸ் என்கிறது படக்குழு.
சந்தானம் 'பாஸ் (எ) பாஸ்கரனை'ப் போல படம் முழுக்க ஆர்யாவின் நண்பனாக வருகிறார். சந்தானம் 70 நாள் கால்ஷீட் கொடுத்துள்ள ஒரே படம் இதுவாகவே இருக்கும். பாடல்களை தவிர எல்லா காட்சிகளிலும் வந்து கலாய்க்கிறார்.
அஞ்சலி இப்படத்துக்காக உடல் எடையை குறைத்து இருக்கிறாராம். இதற்காக அரிசி உணவுகளைத் தியாகம் செய்து தினமும் சப்பாத்தி மட்டும் உண்டு இளைத்திருக்கிறார். அதுவும் இரண்டே மாதங்களில்.
கதை நகரப் பின்னணியில் நிகழ்கிறது. மும்பையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் தான் கதை பயணம் செய்கிறது. சென்னையில் மும்பை ஏர்போர்ட் மற்றும் ஐந்து நட்சத்திர ஒட்டல் செட் போட்டு படமாக்கி இருக்கிறார்கள்.
ஆர்யா ஜேகே அதாவது ஜெயகாந்தன் என்கிற பத்திரிகையாளராக நடித்து இருக்கிறார். இதற்காக 6 மாதம் உடற்பயிற்சி செய்து உடற்கட்டை கூட்டியிருக்கிறார். படம் முழுக்க டி ஷர்ட்டில் டீக்காக வருகிறார்.
படத்தில் சாலையோர கடையில் சிக்கன் சாப்பிட்டுவிட்டு வந்த சந்தானத்துக்கு வயிற்றுப் போக்கு தீவிரமாகிவிடும். நிறுத்த முடியாமல் போய்க் கொண்டிருக்கும். டாக்டருக்கு போன் செய்து 'என்னை பாத் ரூமிலிருந்து ஜாமீனில் எடுங்க ப்ளீஸ்!' என்று கெஞ்சுவார். வயிற்று வலியில் சந்தானம் போராடும் காமெடி, நிச்சயம் படம் பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைத்து வயிற்றுவலி ஏற்படுத்தி விடும் என்கிறது படக்குழு.
'கொசுறு' கபாலி : "மசாலா படத்துலயே மாறி மாறி கலாய்ப்பாரு.. காமெடி படத்துல கேக்கணுமா! "
No comments:
Post a Comment