Sunday, June 17, 2012

த்ரிஷாவுக்கு கல்யாணம்!

த்ரிஷாவுக்கு கல்யாணம்!

  நடிகை த்ரிஷா இந்த ஆண்டு இறுதிக்குள் கல்யாணம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். ஜோடி படத்தின் மூலம் சிறிய கேரக்டரில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. பிற்காலத்தில் நாயகியாக முன்னேறி, பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நாயகிகள் பட்டியலில் இடம்பிடித்த த்ரிஷா, போதையில் குத்தாட்டம், நிர்வாண குளியல் என பல சர்ச்சைகளையும் சந்தித்து விட்டார். தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்த த்ரிஷா, சமீபத்தில் இந்தி படம் ஒன்றிலும் நடித்தார். இதுவரை காதல் வலையில் சிக்காமல் இருந்து வந்த த்ரிஷா, இப்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாராம். இந்த‌ ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என தெரிகிறது.
திருமணத்திற்காக மாப்பிள்ளை வேட்டையில் த்ரிஷாவின் பெற்றோர் இறங்கியிருக்கும் அதே வேளையில் அம்மணி, பிராணிகளுக்கான பாதுகாப்பு இல்லம் ஒன்றை தொடங்க திட்டமிட்டிருக்கிறாராம். பிராணிகள் மேல் அதிக பிரியம் உள்ளவர் நடிக‌ை த்ரிஷா. பெங்களூரில் சாலையில் கிடந்த நாய்க்குட்டியை எடுத்து வந்து தனது வீட்டில் வளர்ந்து வரும் த்ரிஷா, பிராணிகள் நல அமைப்பின் தூதுவராகவும் உள்ளார். ஆதரவில்லாமல் பிராணிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த அவர் தனது நண்பர்களுடன் இணைந்து பிராணிகள் பாதுகாப்பு இல்லம் தொடங்க முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், நாட்டில் நிறைய பிராணிகள் உதவியின்றி இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம். ஆனாலும் முடிந்த அளவு அவைகளுக்கு உதவ திட்டமிட்டுள்ளேன். நண்பர்களுடன் இணைந்து பிராணிகள் பாதுகாப்பு இல்லம் துவங்க முடிவு செய்துள்ளேன், என்றார்.

6-ஆவது விஜய் அவார்ட்ஸ்-வென்றவர்கள் விபரம்

6-ஆவது விஜய் அவார்ட்ஸ்-வென்றவர்கள் விபரம்

விஜய் டிவி-ன் ஆறாவது விஜய் அவார்ட்ஸ் நேற்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் விருதுப் பெற்றவர்களின் பட்டியல்...
சிறந்த நடிகருக்கான ஆண்: விக்ரம் (தெய்வத் திருமகள்)
சிறந்த நடிகருக்கான பெண்: அஞ்சலி (எங்கேயும் எப்போதும்)
சிறந்த வில்லன்: அஜித் (மங்காத்தா)
சிறந்த நகைச்சுவை நடிகர்: சந்தானம் (சிறுத்தை)
சிறந்த துணை நடிகருக்கான ஆண்: சரத்குமார் (காஞ்சனா)
சிறந்த துணை நடிகருக்கான பெண்: உமா ரியாஸ் (மொளன குரு)
சிறந்த பொழுதுபோக்கு நடிகர்: தனுஷ் (மொத்த நடிப்புக்கான)
சிறந்த இசையமைப்பாளர்:  ஜி.வி.பிரகாஷ்(ஆடுகளம்)
சிறந்த பாடல்: யாத்தே யாத்தே (ஆடுகளம்)
சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (வாகை சூட வா - சாரா சாரா)
சிறந்த பெண் பாடகர்: சின்மயி ( வாகை சூட  வா - சாரா சாரா)
சிறந்த ஆண் பாடகர்: எஸ்.பி.பாலசுப்ரமணியன் (ஆடுகளம் - அய்யய்யோ)
ஆண்டின் சிறந்த தேடல்: ஜிப்ரான் ( வாகை சூட  வா)
சிறந்த அறிமுக நடிகர்: நானி (வெப்பம்)
ஆண்டின் சிறந்த குழு: ஆடுகளம்
சிறந்த இயக்குநர்: வெற்றிமாறன் ( ஆடுகளம் )
சிறந்த திரைப்படம்: எங்கேயும் எப்போதும்
சிறந்த திரைக்கதை எழுத்தாளர்: தியாகராஜன் குமாரராஜா(ஆரண்யகாண்டம்)
சிறந்த வசனகர்த்தா: சமுத்திரக்கனி (போராளி)
சிறந்த நடன அமைப்பு: சுசித்ரா (அவன் இவன் - தியா தியா டோல்)
சிறந்த கலை இயக்குநர்: சீனு ( வாகை சூட  வா)
சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்: திலீப் ( ஆரண்யகாண்டம் )
சிறந்த ஒளிப்பதிவாளர்: P.S.வினோத் ( ஆரண்யகாண்டம் )
சிறந்த எடிட்டர்: கிஷோர் ( எங்கேயும் எப்போதும் )
சிறந்த ஒப்பனை கலைஞர்:கோதண்டபானி(7-ஆம் அறிவு)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: அணுவர்தன்& மூர்த்தி ( 7-ஆம் அறிவு )

மக்களின் அபிமான (FAVORITE) விருதுகள்...
ஆண்டின் Fav பாடல்: என்னமோ ஏதோ(கோ)
ஆண்டின் Fav திரைப்பட: கோ
ஆண்டின் Fav ஹீரோ: அஜித் ( மங்காத்தா )
ஆண்டின் Fav இயக்குனர்: வெங்கட் பிரபு ( மங்காத்தா )

சிறப்பு விருதுகள்: 
சிறந்த பின்னனி இசை: யுவன் சங்கர் ராஜா( ஆரண்யகாண்டம் )
செவாலியே சிவாஜி கணேசன் விருது: எஸ்.பி.பாலசுப்ரமணியன் 
ஜூரி நகைச்சுவை விருது: கோவை சரளா (காஞ்சனா)
ஜூரி விருது: சாரா ( தெய்வத் திருமகள் )

பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட்!

பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட்!

இங்கிலாந்து நாட்டின் ரகசிய உளவாளி பாத்திரமான  'ஜேம்ஸ்பாண்ட்' உலக சினிமா வரலாற்றில் மிகவும் பிரபம். பியர்ஸ் பிராஸ்னனை தொடர்ந்து  தற்போது அப்பாத்திரத்தில்  டேனியல் கிரெய்க் நடித்து வருகிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டேனியல் கிரெய்க் நடிப்பில்  'குவாண்டம் ஆப் சோலாஸ்' வெளிவந்தது. அப்படத்தினை தொடர்ந்து  இந்த ஆண்டுதான் ஜேம்ஸ்பாண்ட்டின் புதிய படம் வெளிவர இருக்கிறது.

ஸ்கை ஃபால் (SKY FALL) என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஜேம்ஸ்பாண்ட் படவரிசையில் 23 -வது படமாகும். அதுமட்டுமின்றி இந்த ஆண்டுதான்  ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர் உருவாகி 50 ஆண்டுகள் துவங்குகிறது.

மிகுந்த பொருட் செலவில் உருவாகி வரும் 'ஸ்கை ஃபால்' படத்தை சாம் மெண்டிஸ் இயக்கி வருகிறார். சேவியர் பார்டெம் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் ஜூடி டென்ச், ரால்ப் பெயின்னஸ், ஆல்பர்ட் பின்னர் ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக நவோமி ஹாரிஸ், பெர்னிஸ் மர்லோகே ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தியாவில் கோவா, அஹமதாபாத், டெல்லி ஆகிய இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.

உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கும்  'ஸ்கை ஃபால்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அஜீத் படத்தில் நட்சத்திரக் கூட்டம்!

அஜீத் படத்தில் நட்சத்திரக் கூட்டம்!

'பில்லா 2' படத்திற்குப் பிறகு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்க இருக்கும் படத்தில் சில முக்கிய பாத்திரங்களில் நடிக்க பலரிடம் முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

விஷ்ணுவர்தன் படத்தின் படப்பிடிப்பு 31ம் தேதி மும்பையில் துவங்க இருக்கிறது. இது குறித்து ஸ்ரீ சத்ய சாயி மூவிஸ் நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட் இருக்கிறது.

முதல் முறையாக அஜித்குமாருடன் ஆர்யா இணைந்து நடிக்க உள்ளார். இவர்களுடன் நயன்தாரா மற்றும் தாப்ஸி நடிக்க உள்ளனர். 'பில்லா' வெற்றிப் பட கூட்டணி அஜித்குமார் - நயன்தாரா - விஷ்ணுவர்த்தன் - யுவன்சங்கர் ராஜா மீண்டும் இணைய உள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையை சுபா - விஷ்ணுவர்த்தன் இருவரும் இணைந்து எழுதி இருக்கிறார்கள்.

ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க அரவிந்த்சாமி மற்றும் பிருத்விராஜ் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

அரவிந்த்சாமி தற்போது மணிரத்னம் இயக்கிவரும் 'கடல்' படத்தில் வேடத்தில் நடித்து வருகிறார். அப்படத்தினை தொடர்ந்து இப்படத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சுபா வசனத்தில், பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்ய இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வருகின்ற 31ம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது.

அஜீத் - விஷ்ணுவர்தன் - ஆர்யா - அரவிந்தசாமி - பிருத்விராஜ் - நயன்தாரா - தாப்ஸி - யுவன்சங்கர்ராஜா என பல முன்னணி நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடித்தால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறும் என்பது தயாரிப்பாளர் கணக்கு.

அஜீத்துடன் போட்டி நல்லது! : விஜய்


அஜீத்துடன் போட்டி நல்லது! : விஜய்

'மங்காத்தா' படப்பிடிப்பில் அஜீத்தை விஜய் சந்தித்து பேசினாரோ அன்று முதல் விஜய்யும், அஜீத்தும் நல்ல நண்பர்கள் என்ற பேச்சுகள் அவர்களது ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக "அஜீத் எனது நண்பர்!" என்று பேட்டியளித்து இருக்கிறார் விஜய்.

அஜீத் உங்களுக்கு போட்டியா என்ற கேள்விக்கு " அஜீத்தும் நானும் தொடர்பில் இருக்கிறோம். நிறைய விஷயங்கள் குறித்து நாங்கள் இருவரும் பேசிக் கொள்வோம்.  நடித்து வரும் படங்கள் குறித்தும் பேசுவோம்.

அஜீத் வீட்டிற்கு நான் செல்வேன். அவர் என்  வீட்டிற்கு வருவார். எங்கள் இருவரது குழந்தைகளும் ஒரே பள்ளிக்கு செல்கின்றனர்.

சினிமாவில் எங்களுக்குள் கொஞ்சம்  நீயா நானா போட்டி இருக்கலாம். திரையுலகில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லதுதானே. ஆனால் நிஜத்தில் நாங்கள் நல்ல நண்பர்கள்!" என்று தெரிவித்து இருக்கிறார்.

பில்லா-2 Vs சகுனி !

பில்லா-2 Vs சகுனி !

'பில்லா 2' படத்திற்கும் 'சகுனி' படத்திற்கும் இடையே
கடும் போட்டி நிலவி வருகிறது.

'பில்லா 2'  ஜுன் 22ம் தேதியும், 'சகுனி' ஜுலை 6ம் தேதியும் வெளியாகும் என செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது உள்ள நிலவரப்படி 'சகுனி'  ஜுன் 22ம் தேதி வெளியாவது உறுதியாகி இருக்கிறது.

'சகுனி'  இன்று சென்சார் செய்யப்பட்டு, ஜுன் 22ம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டு, தியேட்டர் ஒப்பந்தம் செய்வதை தொடங்கி விட்டார்கள்.

'பில்லா 2', சகுனி இரண்டுமே ஒரே நாட்களில் வெளியாகி போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விநியோகஸ்தர்கள் மத்தியில் இரண்டு படங்களுமே ஒரே தேதியில் வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

நீண்ட நாட்கள் கழித்து ஒரு பெரிய ஓப்பனிங் இருக்கும் நாயகர்களின் படங்கள் வெளிவருவதால் எந்த படம் வெளிவந்தாலும் விநியோகஸ்தர்கள் காட்டில் பண மழை தான்.. தியேட்டர்காரர்களுக்கு சந்தோஷம் தான்.!

அஜீத்தின் அடுத்தடுத்த டைரக்டர்ஸ் !


அஜீத்தின் அடுத்தடுத்த டைரக்டர்ஸ் !



அஜீத் இப்போது  விஷ்ணுவர்தன், 'சிறுத்தை' சிவா ஆகியோரது இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விஷ்ணுவர்தன் படம் ஜுன் மாதம் துவங்க இருக்கிறது. அதற்குள் 'சிறுத்தை' சிவா படத்தினைப் பற்றிய தகவல்கள் வெளிவர தொடங்கி இருக்கின்றன.

'சிறுத்தை' என்கிற படத்தின் மூலம் கார்த்தியை விநியோகஸ்தர்கள் மத்தியில் வரவேற்புக்குள்ளாக்கியர் சிவா. படத்தின் வசூல் மழையால் தமிழ் திரையுலகில் 'சிறுத்தை' சிவா என்ற அடைமொழியோடு அழைக்க தொடங்கினார்கள். (அப்படம் 'விக்ரமாக்குடு' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்பது தனிக்கதை)

தற்போது ரவிதேஜா, டாப்ஸி ஜோடியில் 'தருவு' என்னும் படத்தினை இயக்கினார். பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'கபார் சிங்' படம் வெளிவந்து சில நாட்கள் கழித்து வெளிவந்தது 'தருவு'. எனினும்  'கபார் சிங்' தெறித்துக் கொண்டு ஓட, 'தருவு' தவழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அதற்குள் தமிழ் திரையுலகில் 'தருவு' படத்தின் ரீமேக்கில் தான் அஜீத் நடிக்க இருக்கிறார் என்றும், 'தருவு' தெலுங்கு பாக்ஸ் ஆபிஸில் சுருண்டதால் அஜீத் இவரது இயக்கத்தில் நடிக்க போவது இல்லை என்று செய்திகள் உலா வந்தன.

அச்செய்திகள் அனைத்தையும் மறுத்து இருக்கிறார் சிவா. அஜீத் நடிக்க இருக்கும் படத்தின் கதை வேறாம்." 'தருவு' படத்திற்கும் இப்படத்திற்கும்  எவ்வித சம்பந்தமும் இல்லை. விஷ்ணுவர்தன் படம் முடிவடைந்தவுடன் எனது படத்தில் அஜீத் நடிப்பது உறுதி" என்று தெரிவித்து இருக்கிறார்.

இப்படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வருகிறாராம் சிவா.

சேட்டை பண்ணும் சந்தானம்!


சேட்டை பண்ணும் சந்தானம்!

டெல்லி பெல்லி' வணிக ரீதியில் பெரிய வெற்றி பெற்று 90 கோடி வசூல் செய்த இந்தி திரைப்படம். இப்படம் தமிழில் 'சேட்டை' என்கிற பெயரில் உருவாகிறது.

ஆர்யா, சந்தானம், ஹன்சிகா, அஞ்சலி, நாசர், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். யு.டிவி நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது. 'ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை', 'வந்தான் வென்றான்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார்.

ஒரு பத்திரிகையாளர் வாழ்க்கையில் நடக்கும் சுவையான பரபரப்பான சம்பவங்களின் தொகுப்பு  தான் கதை.

ஏற்கனவே இப்படத்தை இந்தியில் தயாரித்துள்ள யு.டிவி நிறுவனம் அமீர்கானிடம் முறையாக அனுமதி பெற்று கதை உரிமை வாங்கி தமிழில் தயாரிக்கிறது.

'இளைஞர்களைக் கவரும் உயிரோட்டமான கதையே படத்தின் பலம். அதை மாற்றாமல் தமிழில் கொண்டு வருகிறோம்' என்கிறார் இயக்குனர் கண்ணன்.

இந்தியிலிருந்து தமிழுக்கு என்னென்ன மாற்றாங்கள் செய்யப்படுள்ளன?

இது நல்ல கதை. அது பலமாக இருக்கிறது. தமிழில் கண்ணியமான வசனங்களுடன் காமெடி எவ்வளவு கலக்க முடியுமோ அந்த அளவிற்கு கலந்து இருக்கிறோம். நகைச்சுவையை பிரதானப்படுத்தி எடுத்து வருகிறோம் என்கிறார் இயக்குனர் கண்ணன்.

ஆர்யா பத்திரிகையாளர், பிரேம்ஜி கார்ட்டூனிஸ்ட், சந்தானம் நடுப்பக்கம் பொறுப்பேற்றுள்ள போட்டோகிராபர், அஞ்சலி ஆங்கிலப் பத்திரிகையின் பெண் நிருபர், ஹன்சிகா விமான பணிப்பெண். இவர்களைச் சுற்றி நிகழ்கிறது கதை. நாசர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அது என்ன என்பது சஸ்பென்ஸ் என்கிறது படக்குழு.

சந்தானம் 'பாஸ் (எ) பாஸ்கரனை'ப் போல படம் முழுக்க ஆர்யாவின் நண்பனாக வருகிறார். சந்தானம் 70 நாள் கால்ஷீட் கொடுத்துள்ள ஒரே படம் இதுவாகவே இருக்கும். பாடல்களை தவிர எல்லா காட்சிகளிலும் வந்து கலாய்க்கிறார்.

அஞ்சலி இப்படத்துக்காக உடல் எடையை குறைத்து இருக்கிறாராம். இதற்காக அரிசி உணவுகளைத் தியாகம் செய்து தினமும் சப்பாத்தி மட்டும் உண்டு இளைத்திருக்கிறார். அதுவும் இரண்டே மாதங்களில்.

கதை நகரப் பின்னணியில் நிகழ்கிறது. மும்பையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் தான் கதை பயணம் செய்கிறது. சென்னையில் மும்பை ஏர்போர்ட் மற்றும் ஐந்து நட்சத்திர ஒட்டல் செட் போட்டு படமாக்கி இருக்கிறார்கள்.

ஆர்யா ஜேகே அதாவது ஜெயகாந்தன் என்கிற பத்திரிகையாளராக நடித்து இருக்கிறார். இதற்காக 6 மாதம் உடற்பயிற்சி செய்து உடற்கட்டை கூட்டியிருக்கிறார். படம் முழுக்க டி ஷர்ட்டில் டீக்காக வருகிறார்.

படத்தில் சாலையோர கடையில் சிக்கன் சாப்பிட்டுவிட்டு வந்த சந்தானத்துக்கு வயிற்றுப் போக்கு தீவிரமாகிவிடும். நிறுத்த முடியாமல் போய்க் கொண்டிருக்கும். டாக்டருக்கு போன் செய்து 'என்னை பாத் ரூமிலிருந்து ஜாமீனில் எடுங்க ப்ளீஸ்!' என்று கெஞ்சுவார். வயிற்று வலியில் சந்தானம் போராடும் காமெடி, நிச்சயம் படம் பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைத்து வயிற்றுவலி ஏற்படுத்தி விடும் என்கிறது படக்குழு.

'கொசுறு' கபாலி : "மசாலா படத்துலயே மாறி மாறி கலாய்ப்பாரு.. காமெடி படத்துல கேக்கணுமா!  "

அஜீத் மீண்டும் 'மங்காத்தா' லுக்!

அஜீத் மீண்டும் 'மங்காத்தா' லுக்!

'மங்காத்தா' படத்திற்கு கிடைத்த வரவேற்பை போலவே அப்படத்தில் அஜீத்தின் கெட்டப்பிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

அஜீத் நடிப்பில் வெளியாக இருக்கும் 'பில்லா 2' படத்தில் அக்கெட்டப்பில் நடிக்கவில்லை.

அஜீத் - விஷ்ணுவர்தன் இணையும் படத்தில் அக்கெட்டப்பில் தான் நடித்து வருகிறார் அஜீத்.

அஜீத் , நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்து வரும் இப்படத்தில் இவர்கள் நால்வரது இணைப்பில் உள்ள காட்சிகளை அவசர அவசரமாக மும்பையில் படமாக்கி வருகிறார்கள்.

அஜீத்தை தவிர மீதி அனைவருமே வெவ்வேறு படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்துள்ளதால் தான் இந்த முடிவு.  இது ஒரு துப்பறியும் கதையாம்.

இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார், வினோத் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். விஷ்ணுவர்தனின் கதைக்கு சுபா திரைக்கதை எழுதி இருக்கிறார்கள்.

இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.

அக்ரிமென்ட் விலங்கு? அலறுகிறார் ப்ரணிதா

அக்ரிமென்ட் விலங்கு?
அலறுகிறார் ப்ரணிதா
                   தேன் கொழுக்கட்டையை வாயில வச்சுக்கிட்டே உறங்குன மாதிரி பேரவஸ்தை பட்டுக் கொண்டிருக்கிறார்      ப்ரணிதா .    இவர் சகுனி பட நாயகி.
இரண்டாவது படத்திலேயே கார்த்தி போன்ற பெரிய ஹீரோவுடன் நடிக்கிற வாய்ப்பு Pranithaசும்மாவா கிட்டும்? ஆனால் கிட்டிய வாய்ப்பே நெட்டியை முறிக்கிறதாம் இப்போது. இவரை புக் பண்ணும்போதே தொடர்ந்து மூணு படங்கள் எங்க கம்பெனியில்தான் நடிக்கணும் என்று ஒப்பந்தம் போட்டுவிட்டார்களாம் தயாரிப்பு தரப்பில். கார்த்தி பெரிய நடிகர். அழைப்பது பெரிய கம்பெனி. அந்த நேரத்தில் இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் நடக்காது என்று நினைத்து அக்ரிமென்ட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டாராம் ப்ரணிதா.
இப்போதுதான் அவசரப்பட்டு விட்டோமோ என்று அதிர்கிறாராம். அதற்கும் காரணம் இருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லரையும் ஸ்டில்களையும் பார்த்த தமிழ்சினிமா இயக்குனர்கள் பலர் பிரணிதாவை தங்கள் படங்களில் நடிக்க அழைக்கிறார்களாம். அக்ரிமென்ட் என்ற விலங்கு பின்னங்காலில் பூட்டப்பட்டு இருக்கிறதே, என்ன செய்வார்? 'கேன்சல் பண்ணுங்க ப்ளீஸ்' என்று கெஞ்சுகிறாராம்.
மார்கழி கோலம், அதுல மழை பெய்ஞ்சா பாவம்!

Saturday, June 16, 2012

> ஸ்டைலை பணமாக்கும் பவர் ஸ்டார்.

பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஏது ஸ்டைல்? மண்டையில் அடித்துக் கொள்ளும் வாசகர்களே... இது தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண்.

பதினொரு வருஷத்துக்குப் பிறகு இப்போதுதான் ஒரு மெகா ஹிட்டை கொடுத்திருக்கிறார் பவன் கல்யாண். ஆனாலும் இவரது ரசிகர் பட்டாளம் குறையவில்லை. காரணம் பவனின் பெக்யூலியர் ஸ்டைல். இவர் அணியும் உடைகளுக்கு இளைஞர்கள் மத்தியில் ரொம்பவே வரவேற்பு. கப்பர் சிங் படத்தில் இவர் அணிந்து வரும் உடைகளை அப்படியே இமிடேட் செய்கிறது யூத் வட்டாரம்.

தனது ஸ்டைலை பிசினஸாக்கினால் கோடிகள் அள்ளலாம் என்பது பவனுக்கு தெ‌ரிந்திருக்கிறது. தனது பர்சனல் காஸ்ட்யூம் டிஸைனர் ராஜேஷ் மோரை வைத்து பவர் ஸ்டார் கலெக்சன் என்ற பெய‌‌ரில் துணிக்கடை தொடங்க திட்டமிட்டிருக்கிறார். இதில் உள்ள அனைத்து உடைகளும் ராஜேஷ் வடிவமைத்ததாக இருக்கும்.

திருமதி ர‌ஜினி பாபா கர்ச்சீஃப் விற்ற கதைதான் ஞாபகத்துக்கு வருது.

பார்வதி ஓமனக்குட்டன் நட்சத்திர பேட்டி அஜீத் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல்.

 
பார்வதி ஓமனக்குட்டன். பெயரை நன்றாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாத இறுதி முதல் அடுத்த சில வாரங்களுக்கு தொந்தரவு செய்யப் போகும் பெயர் இது. அஜீத்தின் பில்லா 2 படத்தின் நாயகி. முன்னாள் உலக அழகி என்பது இன்னொரு சிறப்பம்சம். பார்வதி ஓமனக்குட்டன் தனது பெயர் முதல் கேரியர்வரை பகிர்ந்து கொள்கிறவர்.

ஐஸ்வர்யாராய், சுஷ்மிதா சென் என்று உலக அழகிகளின் பெயர்கள் மாடர்னாக இருக்க உங்கள் பெயர் மட்டும் பார்வதி ஓமனக்குட்டன்... கொஞ்சம் ட்ரெடிஷனாக தெரிகிறதே?

இதுதான் உங்கப் பிரச்சனையா. என்னோட அம்மா கொஞ்ச காலம் சிவ பக்தையா இருந்திருக்காங்க. அதாவது அவங்க தமிழ்நாட்ல இருந்த நேரம். அதனால் எனக்கு பார்வதின்னு பெயர் வச்சாங்க. பார்வதின்னா சிவனில் பாதின்னு அர்த்தமாம்.

ஓமனக்குட்டன்...?

அது என்னோட அப்பா பெயர். அதுக்கு அர்த்தம் வேணும்னா அவர்கிட்டதான் கேட்கணும், எனக்கு தெரியாது.

பொதுவா உலக அழகிகள் பட்டம் வென்றதும் நேராக வந்திறங்குற ஏரியா பாலிவுட். நீங்க மட்டும் ஏன் இவ்வளவு தாமதம்?

அழகா இருந்தால் சினிமாவில் நடிக்கணுமங்கிற விதி இருக்கா என்ன? ஒரு சாதாரண பெண்ணா இருக்கணுறம்ங்கிறதுதான் என்னோட ஆசை. சினிமா பிடிக்கும். ஆனா நடிக்கணும்னு நினைச்சதில்லை. எல்லோரும் வற்புறுத்த சரி என்னதான் பார்த்திருவோம்னு ஒரு இந்திப் படத்தில் நடிச்சேன். படம் சரியா போகலை. போயிருந்தால் ஏற்கனவே பிஸியான நடிகை ஆகியிருப்பேன்.

சரி, பில்லா 2 வில் எப்படி கமிட்டானீங்க?

ஒருமுறை சினிமா பங்ஷனுக்காக சென்னை வர வேண்டியிருந்தது. அப்போது நயன்தாரா, பிரபுதேவா காதல் பற்றி மீடியா என்கிட்ட ஏதோ கேட்டாங்க. நானும் ஏதோ பதில் சொன்னேன். மறுநாள் பார்த்தால் அதுதான் தலைப்பு செய்தி. அப்போ நிறைய டைரக்டர்ஸ் நடிக்கிறீங்களான்னு கேட்டாங்க. அப்போதுதான் பில்லா 2 வாய்ப்பு வந்தது. அஜீத் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல் உடனே ஓகே சொல்லிட்டேன்.

ஆக, அஜீத்துக்காகதான் ஒத்துகிட்டீங்க...?

ஆமா. அதேநேரம் டோலட்டி ஐந்து நிமிடம் சொன்ன கதை எனக்குப் பிடிச்சிருந்தது. அதிலயே இது வழக்கமான படம் இல்லைங்கிறது புரிஞ்சது. இது நிறைய பயணங்கள் வழியாக நகர்கிற கதை.

அஜீத் படம், தமிழில் நடிக்கிற முதல் படம்... எப்படி இருந்தது பில்லா அனுபவம்?

நான் சின்ன வயசிலிருந்தே நல்ல படங்களை மட்டும்தான் பார்ப்பேன். அப்படியொரு நல்ல படம்தான் இந்த பில்லா 2. எனக்குப் பிடித்தமான படம்ங்கிறதால் ரொம்ப ஈடுபாட்டோடு நடிச்சேன். ரொம்ப நல்ல அனுபவமாக இது இருந்தது.

அஜீத் வீட்ட்டிற்கு போனீர்களாமே?

வாவ்... நைஸ் எக்ஸ்பீரியன்ஸ். அஜீத் இங்க எவ்ளோ பெரிய ஆள். ஆனா வீட்டில் என்ற ஆடம்பரமும் இல்லாமல் ரொம்ப சாதாரணமாக இருக்கார். அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன். இப்படியும் எளிமையாக இருக்க முடியுமா?

படத்தில் உங்க கேரக்டர்...?

ரொம்ப நல்ல கேரக்டர். அனுபவித்து நடிச்சிருக்கேன். இதுக்கு மேல இப்போது சொல்ல முடியாது.

சினிமாவில் இருந்தாலும் ஒட்டாமலே பதிலளிக்கிறீர்களே ஏன்?

அரசியல், கிரிக்கெட், சினிமா இந்த மூணும்தான் இந்தியாவை ஆண்டுகிட்டு இருக்கு. பட் இந்த மூணு மேலேயும் எனக்கு இன்ட்ரஸ்ட் கிடையாது.

அப்படின்னா தொடர்ந்து நடிப்பீர்களா?

பில்லா 2 மாதிரி படமும், அஜீத் மாதிரி ஹீரோவும் அமைந்தால் நடிப்பேன்.
 
 
 
 
 
 
 
 
 

‘‘தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு இடையில் ௭ன்னதான் பிரச்னை?


தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு ௭ன்னதான் பிரச்சினை ௭ன்று விளக்கம் தருகின்றார் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா...... ‘‘தனுஷ்ஐஸ்வர்யாவுக்கு இடையில் ௭ன்னதான் பிரச்னை?’’ ’’இந்த உலகத்தில் சண்டையே போடாத ஒரு புருஷன் பொண்டாட்டியைக் காட் டுங்க பார்ப்போம். குடும்பம் ௭ன்றால் 24 மணி நேரமும் கொஞ்சிக்கிட்டேதான் இருப்பாங்களா? தனுஷ்ஐஸ்வர்யா சண்டை போட்டுப்பாங்க. அடுத்த நிமிஷமே ௭ல்லாத்தையும் மறந்துட்டு ஒன்னாச் சிரிப்பாங்க. நானும் ௭ன் மனைவியிடம் ௭த்தனையோட தடவை கோபிச்சுட்டுப் போய் இருக்கேன். ராத்திரிக்கு வீட்டுக்கு வராமல் வெளியில் சுத்தி இருக்கேன். ஊடல் இல்லாத உறவுகளே இல்லை. அதுமாதிரிதான் தனுஷ்ஐஸ்வர்யா சண்டைக்கு ஸ்ருதியைக் காரணம் காட்டுவதும் தவறு.

ஸ்ருதியுடன் தனுஷ் நெருக்கமாக நடிப்பதைப் படமாக்கியபோது மருமகளுக்குக் கோபம் வந்திருக்கிறது. ஒரு டைரக்டரா அந்தக் காட்சி ஒகே. ஆனா, மனைவியா அந்த நெருக்கத்தைப் பார்த்துக் கோபமாகிட்டாங்க. அதுக்காக வீட்டுல தினம் தினம் சண்டை போட்டுக்கிட்டா இருப்பாங்க. அன்பு இருக்குற இடத்துலதான் சண்டை வரும். அதுபோல தனுஷுக்கும் மருமகளுக்கும் மனஸ் தாபம் வரும், போகும்’’ ‘‘ஆனால், தனுஷ் தனியாக ஒரு வீட்டில் வசிக்கிறாராமே?’’ ’’௭ந்த வீடு ௭ன்று ௭னக்குக் காட்டுங்கள், நானும் பார்க்க வேண்டும். தனுஷ் மட்டும் அல்ல, செல்வா, மகள்கள் ௭ல்லோருமே தனித்தனி வீட்டில்தான் வசிக்கிறார்கள். தனுஷ் இருக்கும் வீட்டில் அவரோடு ஐஸ் வர்யாவும் அவர்களது குழந்தைகள் யாத்ரா, லிங்கா... ௭ல்லோரும் இருக்கிறார்கள்.

 சில நாட்களுக்கு முன் தனுஷ், செல்வா, ௭ன் மகள்கள் ௭ல்லோரும் குடும்பத்தோடு மாமல்லபுரம் அரு கில் இருக்கும் பொர்ம் ஹவுஸில் சந்தோஷமாய் தங்கிவிட்டு வந்தார்கள்.
 > விஜய்யை மாட்டிவிட்டு பலிகாடாவாக்கிய சிம்பு.

 
வாலு படத்தின் ட்ரெய்லரில் தனுஷை தாக்குவது போல் வசனம் வைத்திருந்தார் சிம்பு. இப்போது அந்த வசனத்தை நான் எழுதவில்லை, இயக்குனர் விஜய் எழுதியது என்று அறிமுக இயக்குனர் விஜய் சந்தருக்கு ஆப்பு வைத்திருக்கிறார்.

தனுஷ் ஒரு படத்தில் கதாநாயகியிடம், என்னை மாதிரி பசங்களை பார்த்த உடனே பிடிக்காது பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும் என்பார். வாலு ட்ரெய்லரில் ஹன்சிகா சிம்புவைப் பார்த்து, ஒருசில பசங்களை பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும்,

உன்னை மாதிரி பசங்களை பார்த்த உடனே பிடிக்கும் என்பார். இது மீடியாவில் பிளாஷாகி சிம்பு, தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் சிண்டை பிடிக்கும் அளவுக்கு மோசமானது.

இந்நிலையில்தான் தனது சூப்பர் பல்டியை போட்டிருக்கிறhர் சிம்பு. எனக்கும் அந்த வசனத்துக்கும் சம்பந்தம் கிடையாது, இயக்குனர் விஜய் எழுதியது அந்த வசனம் என்றிருக்கிறார். ஐயோ பாவம்... இந்தக் கொய்ந்தைக்கு எதுவுமே தெரியாது.
Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema newsவெப்சைட் வைத்துள்ள அசின்
எல்லோரையும் 'அண்ணா' என்று அழைப்பது அசினின் வழக்கம். காரணம், வீட்டில் அவர் மட்டுமே செல்லக்குட்டி. உடன் பிறந்தவர்கள் கிடையாது. தன்னுடன் ஜோடி சேர்ந்த சில ஹீரோக்களையும் 'அண்ணா' என்றே அழைப்பார். எங்கே நம்மையும் இப்படி சொல்லிவிடுவாரோ என்று, ஒருசிலர் முன்னெச்சரிக்கையுடன் ஓட்டம் பிடித்த சுவாரஸ்யமும் உண்டு.

பிளாக் அன்ட் ஒயிட்டில் இருக்கும் தன் சின்ன வயதுப் படங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் அசின், அவ்வப்போது அந்த போட்டோக்களை எடுத்துப் பார்த்து, பிளாஷ்பேக்கில் மூழ்கிவிடுகிறார்.

மும்பையில் ஸ்ரீதேவியின் பங்களாவுக்கு அருகிலேயே அசினுக்கு சொந்த வீடு இருக்கிறது. இதனால், ஸ்ரீதேவியின் இரு மகள்களும் அசினுக்கு நெருக்கமான தோழிகளாகி விட்டனர். ஷூட்டிங் இல்லாத நாட்களில் அவர்களுடன் அரட்டையடிப்பதும், ஸ்ரீதேவியிடம் மேக்கப் மற்றும் டயட் சம்பந்தமாக டிப்ஸ் கேட்பதும் அசினின் வழக்கம்.

ஆன் லைனில் தனக்கென ஒரு வெப்சைட் வைத்துள்ள அசின், சினிமா மற்றும் விளம்பரத்துறையில் தன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி அதில் பதிவு செய்துள்ளார். மேலும், பிரபலமான பத்திரிகைகளில் தன்னைப்பற்றி வரும் 'நல்ல செய்தி'களை ஸ்கேன் செய்து பதிவேற்றுகிறார்.

அசின் சரியான வஞ்சிர மீன் பிரியை. தோல் நீக்கி பதப்படுத்திய வஞ்சிரத்துடன் மசாலா கலந்து 'பிரை' செய்து கொடுத்தால், அளவில்லாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார். தவிர, 'சமையலறை ராணி' பட்டத்துக்கும் பொருத்தமானவர். சிக்கன் பிரைடு ரைஸ், நூடுல்ஸ், பலாப்பழம் பாயசம் செய்வதில் எக்ஸ்பர்ட்.

பிரபல நடிகை பாவனா மரணம்: யாழ் உதயனில் கண்ணீர் அஞ்சலி!

Tuesday, 14 February 2012 பிரபல இந்திய நடிகை பாவனா மரணமானார் என யாழ் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடே ஆடிப்போகும் இச் செய்தி குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாக உள்ளது. பாவனாவின் படத்தை 31ம் நாள் நினைவஞ்சலிக்காக வெளியிட்டுள்ள இப் பத்திரிகை, பெயரை மட்டும் சற்று மாற்றி வெளியிட்டுள்ளது என, யாழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். உண்மையாகவே படத்தில் காணப்படும் நடிகை பாவனா இறக்கவில்லை என்று இந்தியாவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் பணத்துக்காக இவ்வாறு காசை வாங்கிக்கொண்டு விளம்பரத்தை உதயன் பேப்பர் போட்டுள்ளதா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து உதயன் நிர்வாகத்திடம் கேட்டால், தட்டிக் கழிக்கும் தகவல்களைத் தருவதோடு மேலதிகமாக இது குறித்து தாம் பேசத்தயார் இல்லை என்று சொல்கிறார்கள். ஒரு நடிகையின் படத்தை இவ்வளவு வெளிப்படையாகப் போட்டு அவர் இறந்துள்ளதாக யாழ் உதயன் அறிவிக்குமேயானால், அவர்கள் வெளியிடும் செய்திகளை எவ்வாறு நம்புவது என யாழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நல்லவேளையாக யாழில் நடிகை பாவனாவுக்கு ரசிகர் மன்றம் இல்லை! இருந்திருந்தால் உதயனின் நிலை கவலைக்கிடமாகத் தான் இருக்கும்!
Seeman Blasts Vijay Withdrawing From Pagalavan
பகலவன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய், காரணம் சொல்லாமலேயே பின் வாங்கிவிட்டார். ஆனால் பின்னாளில் இந்தப் படத்தில் ஏன் நடிக்காமல் போனோம் என வருத்தப்படுவார், என்று இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் கூறினார்.
விஜய்யும் சீமானும் இணைந்து படம் எடுப்பது குறித்து கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது.
விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டப்படிக் குற்றம் படத்தில் சீமானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் சீமான் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என உறுதியாக பேசப்பட்டது.
பகலவன் என தலைப்பிடப்பட்ட அந்த படத்தில் பல அரசியல் விஷயங்கள் இருக்கும் என்றார் சீமான். வேலூர் சிறையிலிருந்தபடி இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை எழுதி முடித்தார்.
கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரிக்க சம்மதித்தார். ஆனால் தேர்தலுக்கு பிறகு விஜய் இந்தப் படம் குறித்து பேசுவைதையே தவிர்த்தார். தொடர்ந்து ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் என அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுத்தார்.
இந்த நிலையில், சீமானும் வேறு நாயகர்களைத் தேட ஆரம்பித்தார். இப்போது ஜீவா நடிப்பார் என்று தெரிகிறது.
பகலவன் படத்தை பற்றி சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், "தண்ணீரால் நனைய வேண்டிய பூமி கண்ணீராலும் ரத்தத்தாலும் நனைகிறது. மக்கள் அனுபவிக்கும் துயரங்களை அடிப்படையாகக்கொண்டு தான் நான் பகலவன் கதையை எழுதினேன்.
நடிகர் விஜய் நடிப்பதாக இருந்த இந்த படத்தில் இபோது அவர் நடிக்கவில்லை. ஏன் பின்வாங்கினார் என்ற காரணமும் சொல்லவில்லை. நடிகர் ஜீவாவிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் கண்டிப்பாக நடிப்பார். படம் வெளியாகும் போது, இந்தப் படத்தை தவறவிட்டது தவறு என்பதை தவறவிட்டவர்கள் உணர்வார்கள்," என்றார்.
ஏற்கெனவே சீமான் இயக்கி பெரும் வெற்றி பெற்ற தம்பி படத்தில் விக்ரம்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் பின் வாங்கியதால், அதில் மாதவன் நடித்து தனி மரியாதையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

சிறந்த நடிகர் விருதைப் பெறப்போவது அஜீத் குமாரா, தனுஷா???

Siima Best Actor Ajith Or Dhanush துபாயில் நடக்கவிருக்கும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழாவில் சிறந்த நடிகர் விருதைப் பெறப்போவது அஜீத் குமாரா, தனுஷா என்று தெரியவில்லை.
தென்னிந்திய படங்களின் பெருமையை உலகிற்கு பரைசாற்றும் வகையில் இந்த ஆண்டு முதல் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் துபாயில் நடக்கிறது. நிகழ்ச்சியை நடிகர் மாதவன், நடிகை லக்ஷ்மி மஞ்சு தொகுத்து வழங்குகிறார்கள். இதில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதுக்கு தனுஷின் மயக்கம் என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மயக்கம் என்ன படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதுக்கும், ரிச்சா சிறந்த நடிகைக்கான விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தனுஷுக்கு போட்டியாக யார் உள்ளார் என்று தெரியுமா? வேறு யார் அஜீத் குமார் தான். மங்காத்தா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த வில்லன் ஆகிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் 'தல'.
ஆக இறுதிப் போட்டியில் அஜீத்தும், தனுஷும் உள்ளனர்.

மரணத்தை விவரித்த நிருபர் -கண் கலங்கிய சனாகான்

மரணத்தை விவரித்த நிருபர் -கண் கலங்கிய சனாகான்



சில்க் வியாபாரம் எப்பவுமே காஸ்ட்லிதான். புடவைக்கே அப்படியென்றால், படவுலகத்தை ஆட்டிப்படைத்த 'சில்க்' எப்படியெல்லாம் வியாபாரமாவார்? கன்னிமாரா லைப்பரரியை Sana Khanகலைத்துப் போட்ட மாதிரி ஆளாளுக்கு அவரது மெயின் கதையிலிருந்து ஏராளமான கிளை கதைகளை சுட்டு சில்கின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். தென்னக மொழிகள் எல்லாவற்றிலும் தயாராகப் போகிறதாம் சில்க் கதை.
மலையாளத்தில் எடுக்கப்படவிருக்கும் சில்க் கதைக்கு சனாகான்தான் ஹீரோயின் என்று சில தினங்களுக்கு முன்பே நமது இணையத்தில் தெரிவித்திருந்தோம்.
அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள சென்னைக்கே வந்திருந்தார் சனா. சில்க் பற்றி அவர் அறிந்ததைவிட, இங்கிருக்கும் நிருபர்களுக்கல்லவா அதிகம் தெரியும்? மூத்த நிருபர் ஒருவர் சில்க் இறந்த நாளில் என்ன நடந்தது என்பதை சனாவுக்கு திக் திக்கென விவரித்தார். அந்த கொள்ளை அழகு சடலமாக தூக்கில் தொங்கிய கோலத்தை அப்படியே அவர் விவரிக்க, சனாகான் முகத்தில் கவலை அப்பிக் கொண்டது.
சில்க் நடிச்ச எல்லா படங்களையும் பார்த்துக்கிட்டு இருக்கேன். அவரது மேனரிசத்தை அப்படியே கொண்டு வரணும்னு ட்ரை பண்ணுறேன். சில்க்கின் மரணக்காட்சி இப்படத்தில் இடம் பெறுமா தெரியாது. எந்த இடத்திலேயும் விரசம் இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கார் டைரக்டர். அவரது முக்கிய நோக்கமே இந்த படத்துக்கு யூ சர்டிபிகேட் வாங்கணும்ங்கறதுதான். அழுத்தமாக சொல்கிறார் சனாகான்.
அதுவும் சரிதான். இறப்புக்கு பிறகாவது கவுரமாக வாழட்டும்...

கோழி வளங்கோ. குபேரனாகுங்கோ... நமீதா, பாபிலோனாக்கள் அட்டகாசம்

கோழி வளங்கோ. குபேரனாகுங்கோ...
நமீதா, பாபிலோனாக்கள் அட்டகாசம்
Namitha'பறவைகளில் நீ மணிப்புறா...' என்று காதலியை கொஞ்சிய காலம் போய், 'பறவைகளில் நீ ஈமூ, பாடல்களில் நீ கொக்கரக்கோ...' என்கிற அளவுக்கு ஈரோடு கோவை பகுதிகளை போட்டு தாக்கிக் கொண்டிருக்கிறது ஈமூ கோழி வளர்ப்பு பண்ணைகள். அப்படி ஒரு பண்ணையை திறந்து வைக்க நமீதாவும் சென்றிருந்தார்.
கோழி வளங்கோ. குபேரனாகுங்கோ என்று அவருக்கு சொல்லிக் கொடுத்து பேச வைத்திருந்தார்கள் பண்ணையாளர்கள். அதை நன்றாக மனப்பாடம் செய்து கொண்ட நமீதா, 'மச்சான்ஸ்... கோழி வளங்கோ. குபேரனாகுங்கோ' என்ற வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாராம். அவரை சட்டென்று சூழ்ந்து கொண்ட மீடியாக்கள், எப்படிம்மா கோழி வளர்த்தா குபேரன் ஆக முடியும்? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கோ பார்ப்போம் என்று வில்லங்கமாக கேட்கவும் ஆடிப்போனாராம் அவர்.
'அவங்களுக்கு தமிழ் தெரியாது. அதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க' என்று நமீதாவை அவசரம் அவசரமாக மீட்டெடுத்து காருக்குள் ஏற்றினார்களாம் பண்ணையாளர்கள்.
நமீதா இப்படி ஒரு அசைவ பிரசாதத்தை கொடுத்து ஒரு வாரம் ஆவதற்குள் அவரைப்போலவே கோவை பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ஈமூ வளர்க்க சொல்லியிருக்கிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா.
நடமாடும் கறிக்கடைகளாக இவர்கள் மாறி மாறி கோவை, ஈரோடு பகுதிகளுக்கு விசிட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். கோழி விக்குதோ இல்லையோ? இவர்களை பார்க்க வரும் இளைஞர்கள் புண்ணியத்தில் குவார்ட்டர் விற்பனை அமோகமாம்!

ஓவியாவுக்காக ஒரு மோதல் டைரக்டர் & ஹீரோ தவிப்பு

ஓவியாவுக்காக ஒரு மோதல்

டைரக்டர் & ஹீரோ தவிப்பு

 'மனம் கொத்தி பறவை' ஹிட்டா, ஃபிளாப்பா என்று விநியோகஸ்தர் வட்டாரத்தில் கேட்டால் ஆமா... இல்ல... என்று Oviya - Vimalஅவர்களே குழம்புகிறார்கள். சில ஏரியாக்களில் கல்லாபெட்டி நிரம்புச்சு. சில ஏரியாக்களில் பட்டாபட்டி கிழிஞ்சுச்சு என்பதுதான் நிஜமாம்.
ஆனால், ரிசல்ட் எதுவா இருந்தா என்ன? நம்ம பயணம் நாலு கால் பாய்ச்சலில் என்று அடுத்த படத்தை ஆரம்பிக்கப் போகிறார் எழில். இதில் விமல் ஹீரோவாக நடிக்கப் போகிறார்.
பிள்ளையார் சுழி போடுகிற போதே பிரச்சனை கிளம்பிவிட்டதாம். ஓவியாதான் ஹீரோயின் என்கிறாராம் விமல். ஐய்யே அதுவா, வேற ஆளை பார்க்கலாமே என்கிறாராம் எழில்.
களவாணி. கலகலப்பு இரு படங்களிலும் ஓவியா இருந்தார். சென்ட்டிமென்டாகவே அப்படங்கள் ஹிட். இதை அப்படியே தொடர்ந்தால் டென்ஷன் ஃப்ரியாச்சே என்று நினைக்கிறாராம் விமல். அதனால்தான் இத்தனை பிடிவாதமாம்.
வாதத்துக்கு மருந்து இருக்கு. பிடிவாதத்துக்கு?

லண்டன் ஓட்டலில் தகராறு செய்தேனா...? லட்சுமி ராய் விளக்கம்

லண்டன் ஓட்டலில் தகராறு செய்தேனா...?
லட்சுமி ராய் விளக்கம்


கடந்த வாரம் முழுவதும் லட்சுமி ராய் பற்றிய ஒரு செய்தி மீடியாவில் பிரதானமாக இடம்பிடித்தது.
அது, 'தாண்டவம் படப்பிடிப்புக்காக லண்டன் போன லட்சுமிராய், நட்சத்திர ஓட்டலில் Lakshmi Raiரூம் வசதியாக இல்லை என்று கூறி தகராறு செய்தார்' என்பதுதான்.
இந்த செய்தி உண்மைதானா என்ற குறைந்தபட்ச உறுதிப்படுத்தல் கூட செய்யாமல் அவசர அவசரமாக பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டுவிட்டன. இதில் லட்சுமி ராய்க்கு கொஞ்சமல்ல... ரொம்பவே வருத்தம்.
உண்மையில் நடந்தது என்ன?
லட்சுமி ராயே சொல்கிறார்...
"நான் எந்த ஹோட்டலிலும் தகராறு செய்யவில்லை. அப்படிப்பட்ட பெண்ணுமல்ல நான். ஒரு பிரபலமாக இருந்து கொண்டு, பொது இடத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்ள முடியுமா..
உண்மையில் அன்று நான் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு சென்று, எனக்கு ஒதுக்கப்பட்ட அறையைக் கேட்டேன். அதில் வேறு யாரோ தங்கியிருந்தனர். எனது அறையை எப்படி மற்றவர்களுக்கு ஒதுக்கினார்கள் என்று தெரியவில்லை. எனவே எனக்கான அறையைத் தருமாறு அவர்களிடம் கூறிவிட்டு, வரவேற்பரையில் காத்திருந்தேன்.
அப்படியும் கூட அந்த அறை கிடைக்கவில்லை. வேறு ஹோட்டலில் வேறு அறையைத்தான் தந்தார்கள். நான் மறுப்பேதும் சொல்லாமல் அதில்தான் தங்கினேன்.
ஆனால் அதற்குள் யார் என்ன சொன்னார்களோ... விஷயம் வேறு மாதிரி பரவி, என்னமோ நான்தான் பிரச்சினையைக் கிளப்பியதாக செய்தி வந்துவிட்டது.
இப்படித்தான் நான் ஏதோ தனி விமானத்தில் சென்னை வந்ததாக சில தினங்களுக்கு முன் சொன்னார்கள். அப்புறம் உண்மையைச் சொன்ன பின் அமைதியானார்கள்," என்றார்.

Friday, June 15, 2012

சூர்யா கால்ஷீட் மடக்கிய செல்வராகவன்

சூர்யா கால்ஷீட்

மடக்கிய செல்வராகவன்

'மடக்குவது எப்படி, முப்பதே நாளில் கற்கலாம்' என்று செல்வராகவன் ஒரு புத்தகம் Suryaஎழுதலாம். அந்தளவுக்கு வித்தை தேர்ந்தவராக இருக்கிறார் அவர். தயாரிப்பாளர்களை அழ விடுகிற நேர்த்தியில் இவரை அடுத்த பாலா என்றே வர்ணிக்கலாம். அப்படிப்பட்டவர் சூர்யாவின் கால்ஷீட்டை வாங்கி, ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஒரு படத்தையும் எடுக்கப் போகிறாராம்.
செல்வராகவனை பற்றி இப்படி ஒரு அறிமுகம் கொடுக்க வேண்டுமா என்பவர்களிடம், சாம்பிளுக்கு ஒரு சம்பவத்தை சொன்னால் சட்டுபுட்டென்று வாயை பொத்திக் கொள்வார்கள். இரண்டாம் உலகம் படப்பிடிப்பையே இன்னும் இழுத்துக் கொண்டிருக்கிறார் செல்வா. இப்படத்தின் ஷுட்டிங்குக்காக அண்மையில் கோவாவுக்கு போயிருந்தார் இவர். இவருடன் சுமார் 100 பேர் கொண்ட குழுவும் போயிருந்தது.
அங்கு போய் இறங்கியவுடன் செல்வா சொன்னது என்ன தெரியுமா? நான் கோவாவை பார்த்ததில்ல. அதனால் ரெண்டு நாள் எல்லாருக்கு லீவு. நல்லா சுற்றி பார்த்துட்டு அப்புறமா ஷுட்டிங் வச்சுக்கலாம்.
ரெண்டு நாள் முன்னாடி இவர் மட்டும் வந்திருந்து அந்த வேலையை செஞ்சுருக்கலாமே? 100 பேருக்கு சாப்பாடு, தங்கும் செலவு, அவுட்டோர் டபுள் பேட்டா என்று தயாரிப்பாளரின் அண்டிராயரில் ஒட்டுத்துணி போட வேண்டியிருக்காதே என்று புலம்பினாராம் யூனிட்டிலேயே வேலை பார்த்த ஒரு அக்கறை ஆசாமி. இதுதான் செல்வா.
சரி... இது சூர்யா மற்றும் ஞானவேல்ராஜா பிரச்சனை. நமக்கென்ன? கோழிக்கு வேலை கூவுறது, கொழுக்கட்டைக்கு வேலை வேகறது! விட்டு தள்ளுங்கப்பா...

அமலாவின் காதல்கள் அசராத தேடல்கள்...

ஒரு நடிகை லிப்ஸ்ட்டிக் வாங்குனா கூட, 'யாரும்மா ஸ்பான்சர்?'னு கேட்கிற Amala Paulஅளவுக்கு சந்தேகத்தை முழுங்கி சங்கடத்தை வாந்தியெடுக்கிற ஏரியா இது. அடையார் பகுதியில் மூன்று கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியிருக்கிறார் அமலா பால். சும்மா விடுவார்களா?
ஒரு 'குமார' தயாரிப்பாளரின் கடைக்கண் புண்ணியம்தான் இது என்று கடைவாய் பல்லில் விஷத்தை நனைத்து வில்லங்கத்தை கக்குகிறார்கள். இதையெல்லாம் கண்டும் காணாதது போல தானுண்டு தன் பங்களா உண்டு என்று ரசிக்க ஆரம்பித்திருக்கிறார் அமலா.
டைரக்டர் விஜய்க்கும் இவருக்கும் காதல் என்று வெளிவந்த கிசுகிசுக்களுக்கும் ஒரு முடிவு கட்டியிருக்கிறது இந்த இல்லம். கோடம்பாக்கத்திற்கே தெரிந்த இந்த கள்ளவீடு ரகசியம், விஜய்க்கு தெரியாமலா இருக்கும்? கோபத்தில் அவர் குறுகுறுக்க, நாளைக்கு கிடைக்கிற பண்ணையை விட, இன்னைக்கு கிடைக்கிற திண்ணை மேல் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் அமலா.
ஆகமொத்தம், லவ்வு அவுட்!

காஜல் முதல் ஹன்சிகா வரை... நடக்குமா அதெல்லாம்!?

காஜல் முதல் ஹன்சிகா வரை... நடக்குமா அதெல்லாம்!?

அவரே சலிச்சு போகிற அளவுக்கு சல்லடையால் சலித்துக் கொண்டிருக்கிறார் கோடம்பாக்கத்தை. வேறு யார்? நம்ம எதிர்கட்சி தலைவர்தான்! மகனின் திரையுலக பிரவேசம் கிராண்ட் ஸ்வீட்டாக Hansika Motwani - kajal Agarwalஇருக்க வேண்டுமல்லவா, அதற்காகதான் இத்தனை மெனக்கெடல்.
சில மாதங்களுக்கு முன் இவரால் அழைக்கப்பட்ட இரு இயக்குனர்கள் தான் ஏ.ஆர்.முருகதாசும், பாலாஜி சக்திவேலும்! திட்டம் எது என்பதே தெரியாமல் போனவர்கள் முன்பு மகனின் எதிர்காலத்தை ஒப்படைக்கிற அளவுக்கு பேசினாராம் தலைவர். 'இப்போது சிரமம். போக போக கை கொடுக்கிறோம்' என்றார்களாம் இருவரும்.
இதற்கிடையில் மகனுடன் ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளுக்கும் வலை வீச ஆரம்பித்திருக்கிறது தலைவர் தரப்பு. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று நினைத்திருக்கலாம். தமிழ், தெலுங்கிலிருக்கும் டாப் மோஸ்ட் நடிகைகளுக்கெல்லாம் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காஜலில் ஆரம்பித்து ஹன்சிகா வரைக்கும் போனதாம் தூது. அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்பது இப்போதைக்கு தேவையில்லாத சமாச்சாரம்.

பொற்கொடி பத்தாம் வகுப்பு

போர்க்கொடி 10ம் வகுப்பு
காதல், வழக்கு எண் 18/9 மாதிரி ஸ்கூல் காதலை மையமாக கொண்ட படம்தான் இது. ஆனால் ஏழைக்கேற்ற எள்ளுருண்டை, காக்கைக்கேற்ற பொரி உருண்டை சைஸ்தான் இப்படமும், பட்ஜெட்டும்.
ஸ்கூலில் கிடைக்கும் சத்துணவை சாப்பிடாமல் அதை தன் அம்மாவுக்கு எடுத்துச் செல்லும் மாணவி ஒருத்திக்கும், அம்மாவே இல்£த அநாதை மாணவன் ஒருவனுக்கும் இடையே ஏற்படுகிற ஈர்ப்புதான் இப்படத்தின் நகர்வு. மதுபானக்கடை என்ற தலைப்பிலேயே ஒரு படம் விரைவில் வரப்போகும் நிலையில், மதுவுக்கு முற்றிலும் எதிரான படம் இது. 'அட... குடிகாரப் பாவிகளா, வௌங்குவீங்களா நீங்க?' என்கிற ஆத்திரம் வழிகிறது இப்படத்தில்.
நகர்புறம், கிராமம் என்று எல்லா ஏரியாவிலும் தன் கூர்மையான அலகால் வருங்கால சந்ததிகளை கொத்திப்பிடுங்கும் கழுகான மதுவையும் அதன் அரக்கத் தனத்தையும் சித்தரிக்கும் படம். காதலுடன் கருத்தையும் திணித்திருக்கும் புது இயக்குனர் பழ.சுரேஷுக்கு மானசீகமாக ஒரு வணக்கம்.
பேசாமலே பேசுகிறார் பொற்கொடி. கண்களிலும் இதழ்களிலும் வழிகிற சோகத்தை மீறி அவர் எப்படியிருப்பார் என்கிற ஆவலை அவ்வப்போது பூர்த்தி செய்கின்றன அழகான பாடல்களும் காட்சிகளும். அதற்காக ஒரு பெண் எந்நேரமும் சோகம் வழிய திரிவது நன்றாகவா இருக்கிறது? நல்லவேளை, கனவுக்காட்சிகளில் சிரிக்கிறார், அழகாகவும் இருக்கிறார்.
பள்ளிக்கூட காதல் எப்படியிருக்கும்? ஐ லவ் யூ சொல்வதற்குள் நாலு பரீட்சை கிராஸ் ஆகிவிடும் போல. எப்படியோ மென்று முழுங்கி இவர் ஐ லவ் யூ சொல்ல, பொற்கொடி போர்க்கொடி உயர்த்தாமல் மவுனமாக சென்றுவிடுகிறார். அப்புறம் அவரை நினைத்து இவர் ஏங்குவதும், பொற்கொடியை காப்பாற்ற போராடுவதுமாக ஒரே டிராஜடிகள்... விசும்பல்கள்...
வறுமை தாண்டவமாடும் குடும்பத்தில் ஒரு அம்மா எப்படியிருப்பாள்? அந்த இடத்தில் ஸ்லிப்பாகி விழுந்திருக்கிறார் இயக்குனர். கருத்தம்மா ராஜஸ்ரீயும், அவரது திணவெடுத்த பாடி லாங்குவேஜும் எந்தவித பச்சாதாபத்தையும் ஏற்படுத்தவில்லையே பிரதர்.
பாலாசிங்தான் வில்லன். கொடுத்த காசுக்கு போனசாக கற்பழிப்பு காட்சி ஒன்றும் இருக்கிறது. மஞ்சு விரட்டுகிறார் மனிதர்.
அப்புறம் தாடி மற்றும் தாறுமாறான தலைமுடியுடன் ஒரு ஒல்லி ஆசாமி சிரிப்பு மூட்ட ட்ரை பண்ணுகிறார். எரிச்சல்தான் மிஞ்சுகிறது.
வாங்கிய சம்பளத்தையெல்லாம் ஆர்மோனிய பொட்டிக்கே அர்ப்பணித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஓவியன். இதே பாடல்கள் பெரிய இயக்குனர்களின் படங்களில் இடம் பெற்றிருந்தால் ஓவியனை உசத்தி பிடித்திருக்கும் கோடம்பாக்கம்.
அன்பும் அரவணைப்பும் கிராமங்களில்தான் மிச்சமிருக்கிறது என்கிற குறைந்தபட்ச ஆறுதலையும் நம்பிக்கையையும் குதறிப் போடுகிறார்கள் படம் முழுக்க.
கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் பொற்கொடி பத்தாம் வகுப்பை தாண்டியிருப்பாள்...

Billa 2 to be screened in Belgium for the First Time Ever


For the First time ever, Billa 2 is going to be screened in Belgium.
Below are the details:
Address : Boulevard du Centenaire 20 1020 Brussels
Place : Kinepolis Brussels , Screen 25.
The release date will be let know later.
Stay tuned for Further updates…..
பெரிய இடத்தில் மோதல் எதுக்கு?
- பின்வாங்கினார் விஜய்

ஒருகாலத்தில் ஜெ ஜெ டி.வியில் பொறுப்பு வகித்த பாஸ்கரன், உடன்பிறவா தோழி Vijay - Baskaranசசிகலாவின் தம்பி என்பது யாவரும் அறிந்ததே. அவர் சினிமா ஹீரோவாகிவிட்டார் என்ற தகவல் இன்னும் தகவல் நிலையிலேயே இருக்கிறது. ஷுட்டிங்? அது நடக்குற நாளில் நடக்கும் என்று மெத்தனமாகவே இருந்தவர்களுக்கு பேரதிர்ச்சி. இவரே விரும்பி வைத்த 'தலைவன்' டைட்டிலை விஜய் சுட்டுவிட்டார்.
சட்டி சுட்டவுடன் கையை நழுவ விட பாஸ்கரன் என்ன சாதாரண ஆளா? விஜய்யை எச்சரிக்கும் பொருட்டு திடீரென்று தனது ஸ்டில்களை நிருபர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார், அதுவும் 'தலைவன்' என்ற தலைப்பை மாற்றாமலேயே! தமிழில் லட்சக்கணக்கான வார்த்தைகள் அநாதையாக கிடக்க, இந்த ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தார்கள் இருவரும். தலைமைன்னாலே போட்டி தானா வந்திரும் போலிருக்கே என்று மக்கள் கருதுகிற நேரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது இந்த விஷயத்தில்.
வேறொன்றுமில்லை, தலைப்பை நீங்களே வச்சுக்கோங்க என்று பின் வாங்கிவிட்டார் விஜய்.
வியாபார உலகின் பிக் பிரதர்ஸ்
சூர்யாவும் கார்த்தியுமா?

Surya-Ajith-Karthi-Vijay

தமிழ்சினிமாவின் 'பிக் பிரதர்ஸ்' ஆகிவிட்டார்கள் சூர்யாவும் கார்த்தியும். 'சுண்டு'வாக்கிளி கார்த்தி, நண்டுவாக்கிளி அஜீத்தை எதிர்க்கிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை. பில்லா-2 ம், சகுனியும் ஒரே நாளில் வெளியாகப் போகிறதாம். அஜீத் ரசிகர்களை ஆக்ரோஷம் கொள்ள வைத்திருக்கும் இந்த ரிலீஸ், அடையப் போகும் லாபம் என்ன என்பதை இப்போதே கணித்துவிட முடியாது.

அடுத்து கோடம்பாக்கம் குமைந்து குமைந்து பேசிக் கொண்டிருப்பது இன்னொரு விஷயத்தை பற்றிதான். சூர்யா படமான மாற்றானின் வியாபாரம், விஜய்யின் துப்பாக்கி வியாபாரத்தை முந்திவிட்டதாம். அதுவும் பல கோடிகள்...

துப்பாக்கியை விட சுமார் 28 கோடி ரூபாய் அதிகமாக விற்பனையாகியிருக்கிறதாம் மாற்றான். கே.வி.ஆனந்த் என்ற இயக்குனரின் தனிப்பட்ட அந்தஸ்தும் இந்த வியாபாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆறுதல் கொள்ளும் விஜய் அபிமானிகள், தங்களுக்குள் கேட்டுக் கொள்ளும் இன்னொரு கேள்வி நியாயமானது. அப்படியென்றால் துப்பாக்கி இயக்குனர் முருகதாஸ், கே.வி.ஆனந்தை விட திறமையில் குறைவானவரா? இப்படி மாறி மாறி முட்டிக் கொள்கிறது அபிமானிகளின் மனசாட்சி.

மணிரத்னம் அழைப்பு நயன்தாரா முறைப்பு

மணிரத்னம் அழைப்பு

நயன்தாரா முறைப்பு

மயில் நொண்டினாலும் நாட்டியம். குயில் இருமினாலும் பாட்டு. இந்த கோடம்பாக்க Nayantharaகொள்கையில் மணிரத்னமும் மாட்டியதுதான் ஆச்சர்யம்.
இன்றைய சூழலில் நயன்தாரா படத்திலிருந்தால் அதற்கு தனியாக ஒரு விளம்பர வேல்யூ இருப்பதை புரிந்தே வைத்திருக்கிறார்கள் சிலர். அதற்காக நடக்கும் போட்டியில் அஜீத்துக்கு கிடைத்த வெற்றி, நயன்தாராவின் முன்னாள் 'ஹாட் டிஸ்க்'கான சிம்புவுக்கு கிடைக்கவில்லை.
இந்த நேரத்தில் மணிரத்னமும் தனது 'கடல்' படத்தில் நடிக்க நயனை அழைத்தாராம். அது சின்ன கேரக்டர் என்பதால் நயன்தாராவின் பதில் மணி ரசிக்கக்கூடியதாக இல்லையாம்.


சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள்!

புத்தகத்தின் பெயர் : சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள்!
விலை : ரூ.50
எழுத்தாளர் : சபீதா ஜோசப்
சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள்பதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
105, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 600014. தொலைபேசி: 28485943
மக்களிடையே, மக்கள் மனதில் சூப்பர் ஸ்டார் ஆக நிலைத்து இருப்பது ஒரே ஒருவர் மட்டுமே அவர் ரஜினிகாந்த் தான். நான் சொன்னதை தான் செய்வேன், செய்வதை தான் சொல்வேன் என்று வாழ்ந்து கொண்டு இருப்பவர். அவர் கூறிய சில அறிவுரை கதைகளை மிகவும் எளிமையாக படைத்துள்ளார் சபீதா ஜோசப். இந்நூலில் சபீதா ஜோசப் ரஜினியின் வாழ்க்கை, அவர் எப்படி நடிக்க வந்தார், அவர் விருப்பம் அனைத்தையும் ரஜினியிடம் இருந்தே பதில்களாக பெற்று தொகுத்து வழங்கியுள்ளார்.
ஒரு மனிதன் எவ்வாறு இருக்க வேண்டும், எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்று ரஜினி கூறுவதை மிகவும் வசிகரமாக எழுதியுள்ளார் எழுத்தாளர். மொத்தத்தில் இந்நூல் ரசிகர்களுக்கு ஒரு கையேடு.
- தேன்மொழி.

சிகரெட் விவகாரம்... சீறுகிறார் முருகதாஸ்

சிகரெட் விவகாரம்...

Thuppakki சீறுகிறார் முருகதாஸ்

                                                                                                                                                                                              நீங்கள்         துப்பாக்கி        ரவையை மேலே எறிந்தால், முருகதாஸ் அந்த               துப்பாக்கியையே            பதிலுக்கு எறிவார் போலிருக்கிறது. திருப்பிக் கேட்டா தாங்க மாட்டே என்கிற மாதிரியே இருந்தது அவரது பதில். அண்மையில் எழுந்த சுருட்டு விவகாரத்திற்கு அணையுற நேரத்திலாவது ஒரு பதிலை சொல்லி அசர வைத்திருக்கிறார் மனுஷன்.
துப்பாக்கி பட போஸ்டரில் விஜய் சுருட்டு பிடிக்கிற மாதிரி ஒரு ஸ்டில்லை பார்த்து புகை விடாத குறையாக அதிர்ந்தது பா.ம.க ஏரியா. இந்த காட்சி படத்தில் இடம்பெற்றால் அவ்வளவுதான் என்று எச்சரித்தார் சின்ன டாக்டர். இதை தொடர்ந்து அந்த போஸ்டர்கள் ஒட்டுவதை நிறுத்திய முருகதாஸ் படத்தில் அதுபோன்ற காட்சிகள் இருக்காது என்று உத்தரவாதம் கொடுத்தார். இப்போது அது தொடர்பான மேலும் கொஞ்சம் விளக்கம் வந்திருக்கிறது அவரது வாயிலிருந்து. அது...
யாருடைய வற்புறுத்தலுக்கும் A.R.Murugadossபயந்து அந்த காட்சியை நீக்கல. ஆனால் இதை எல்லாம் அரசியல் ஆக்குறதுல எனக்கு உடன்பாடே கிடையாது. ஸ்மோக் பண்ணக் கூடாதுங்கிற பொறுப்பு இங்கே எல்லாருக்குமே வரணும். ஆனா இவ்வளவு பேசுறவங்க, போராடுறவங்க, சிகரெட் கம்பெனி முன்னே நின்னு அதை நிரந்தரமா மூடச் சொல்லி போராடலாமே? எந்த கட்சி தன் ஆட்சியில் சிகரெட்டை தடை பண்ணுதோ, அடுத்த தேர்தல்ல அந்த கட்சியோடதான் கூட்டணின்னு சொல்லலாமே? அப்படியெல்லாம் சொல்ல மாட்டேங்கிறாங்க. ஒரு போஸ்டர் ஒட்டினா கோபப்படுறாங்க. அதுதான் ஆச்சர்யம்.
முருகதாஸ் கேள்விக்கு உருப்படியான பதில் இருக்கிறதா டாக்டர்ஸ்?

தமிழ் படத்தில் கரீனா கபூர் கம்பளம் விரிக்கும் எஸ்.ஜே.சூர்யா

தமிழ் படத்தில் கரீனா கபூர்

கம்பளம் விரிக்கும் எஸ்.ஜே.சூர்யா

Kareena kapoorஇந்திய படங்கள் என்றால் அது இந்திப்படங்கள்தான் என்கிற நிலைதான் இருக்கிறது உலகம் முழுக்க. அப்படிப்பட்ட எண்ணத்தை அடியோடு தகர்க்கிற விதத்தில் படம் எடுக்கும் சில தமிழ்ப்பட இயக்குனர்கள் முறையாக அவற்றை உலகப்பட விழாக்களில் திரையிட்டு, 'நாங்களும் இந்தியாதான்யா...' என்று மார்தட்ட தவறுவதில்லை.
இப்படிப்பட்ட நேர் பார்வையா, அல்லது வியாபாரம் தொடர்பான கூர் பார்வையா தெரியாது. எஸ்.ஜே.சூர்யா செய்யப் போகும் ஒரு விஷயம் எல்லா 'வுட்'டுகளையும் நிச்சயம் திரும்பி பார்க்க வைக்கும். அது, இந்தியில் கொடிகட்டிப் பறக்கும் கரீனா கபூரை தனது 'இசை' படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வைக்கப் போகிறாராம்.
ஒரு மினி டி.ராஜேந்தராக நம் கண் முன் அவதாரம் எடுத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, அவரைப்போலவே இயக்கி தயாரித்து இசையமைத்து இப்படத்தில் நடிக்கவும் செய்கிறார். 'இசை' யின் இசையும் எஸ்.ஜே.சூர்யா என்பதால், நான் ஆட வருவதற்கு முன்பாக அவசியம் முழு பாடலையும் எனக்கு போட்டுக் காட்ட வேண்டும் என்று கூறிவிட்டாராம் கரீனா. (என்னம்மே டவுட்டு?)
ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கே றெக்கை முளைக்கிற அளவுக்கு ஆர்மோனிய பெட்டியை இசைக்க விட்டுக் கொண்டிருக்கிறார் சூர்யா.
மெட்டு மும்பை வரைக்கும் கேட்குதாக்கா...?

வடிவேலு வந்துட்டாரு... சந்தானம் அலறிட்டாரு...

வடிவேலு வந்துட்டாரு...
சந்தானம் அலறிட்டாரு...

vadivelu - santhanam                                                                                            கிழட்டு சிங்கமா இருந்தாலும் கிடாப் பல்லு ஸ்டிராங்குன்னு நிரூபிச்சிருக்கார் வடிவேலு. படமே இல்லாமல் வீட்டிலிருக்கும் அவருக்கு ஆறுதலாக, அவர் எப்பவோ நடித்த 'மறுபடியும் ஒரு காதல்' என்ற படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதில்தான் நான் என்னைக்குமே சிங்கம்டா என்று மார் தட்டியிருக்கிறார் அவர்.
சிங்கம் கிளம்பிருச்சே, சிற்றுண்டியாவது மிச்சமிருக்குமா என்று பிற நடிகர்களை பதற வைத்திருக்கிறது அவரது ரீ என்ட்ரி. பல தமாஷ் நடிகர்களை க்ரஷ் பண்ணியிருக்கும் வடிவேலுவின் இந்த ரீ என்ட்ரி சந்தானம் விஷயத்தில் எப்படி? ஆ.வி பதில்களில் தானும் ஒரு வடிவேலு ரசிகன் என்பதை போலவே பதில்களை சொல்லி பேலன்ஸ் ஏர் ஓட்டியிருக்கிறார் சந்தானம். விட்டால் வடிவேலுவுடன் சேர்ந்து நடிக்க அழைத்தாலும் அவர் மறுக்க மாட்டார் போலிருக்கிறது.
இதற்கிடையில் சந்தானத்தின் இன்னொரு மாஸ்டர் பீஸாக உருவாகிக் கொண்டிருக்கிறது சேட்டை. இப்படத்தில் ஒரு சினிமா நிருபராக நடிக்கிறாராம் அவர். நடுப்பக்கத்தில் கிசுகிசு எழுதும் இவரது பெயர் நடுப்பக்க நக்கி!
நாகராஜ் என்கிற பெயரைதான் நக்கியாக சுருக்கிக் கொண்டிருக்கிறார் சந்தானம். படத்தில் யாரையெல்லாம் கழுவி எதிலெல்லாம் ஊற்றப் போகிறாரோ? இவரது கிண்டலில் நிருபர்களே சிக்கி சின்னாபின்னமாவார்கள் போல தெரிகிறது.
வாரமலர்- எலீசா, சினிமா பொன்னையா, தினத்தந்தி -ஆண்டிபண்டாரம், குருவியார், நக்கீரன்- கொக்கரக்கோ எல்லாரும், ஒரு எட்டு சந்தானத்தை பார்த்து எச்சரிச்சுட்டு வர்றது நல்லது!