அஜீத் படத்தில் நட்சத்திரக் கூட்டம்!
'பில்லா 2' படத்திற்குப் பிறகு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்க இருக்கும் படத்தில் சில முக்கிய பாத்திரங்களில் நடிக்க பலரிடம் முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.விஷ்ணுவர்தன் படத்தின் படப்பிடிப்பு 31ம் தேதி மும்பையில் துவங்க இருக்கிறது. இது குறித்து ஸ்ரீ சத்ய சாயி மூவிஸ் நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட் இருக்கிறது.
முதல் முறையாக அஜித்குமாருடன் ஆர்யா இணைந்து நடிக்க உள்ளார். இவர்களுடன் நயன்தாரா மற்றும் தாப்ஸி நடிக்க உள்ளனர். 'பில்லா' வெற்றிப் பட கூட்டணி அஜித்குமார் - நயன்தாரா - விஷ்ணுவர்த்தன் - யுவன்சங்கர் ராஜா மீண்டும் இணைய உள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையை சுபா - விஷ்ணுவர்த்தன் இருவரும் இணைந்து எழுதி இருக்கிறார்கள்.
ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க அரவிந்த்சாமி மற்றும் பிருத்விராஜ் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
அரவிந்த்சாமி தற்போது மணிரத்னம் இயக்கிவரும் 'கடல்' படத்தில் வேடத்தில் நடித்து வருகிறார். அப்படத்தினை தொடர்ந்து இப்படத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சுபா வசனத்தில், பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்ய இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வருகின்ற 31ம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது.
அஜீத் - விஷ்ணுவர்தன் - ஆர்யா - அரவிந்தசாமி - பிருத்விராஜ் - நயன்தாரா - தாப்ஸி - யுவன்சங்கர்ராஜா என பல முன்னணி நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடித்தால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறும் என்பது தயாரிப்பாளர் கணக்கு.
No comments:
Post a Comment