Saturday, June 16, 2012

கோழி வளங்கோ. குபேரனாகுங்கோ... நமீதா, பாபிலோனாக்கள் அட்டகாசம்

கோழி வளங்கோ. குபேரனாகுங்கோ...
நமீதா, பாபிலோனாக்கள் அட்டகாசம்
Namitha'பறவைகளில் நீ மணிப்புறா...' என்று காதலியை கொஞ்சிய காலம் போய், 'பறவைகளில் நீ ஈமூ, பாடல்களில் நீ கொக்கரக்கோ...' என்கிற அளவுக்கு ஈரோடு கோவை பகுதிகளை போட்டு தாக்கிக் கொண்டிருக்கிறது ஈமூ கோழி வளர்ப்பு பண்ணைகள். அப்படி ஒரு பண்ணையை திறந்து வைக்க நமீதாவும் சென்றிருந்தார்.
கோழி வளங்கோ. குபேரனாகுங்கோ என்று அவருக்கு சொல்லிக் கொடுத்து பேச வைத்திருந்தார்கள் பண்ணையாளர்கள். அதை நன்றாக மனப்பாடம் செய்து கொண்ட நமீதா, 'மச்சான்ஸ்... கோழி வளங்கோ. குபேரனாகுங்கோ' என்ற வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாராம். அவரை சட்டென்று சூழ்ந்து கொண்ட மீடியாக்கள், எப்படிம்மா கோழி வளர்த்தா குபேரன் ஆக முடியும்? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கோ பார்ப்போம் என்று வில்லங்கமாக கேட்கவும் ஆடிப்போனாராம் அவர்.
'அவங்களுக்கு தமிழ் தெரியாது. அதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க' என்று நமீதாவை அவசரம் அவசரமாக மீட்டெடுத்து காருக்குள் ஏற்றினார்களாம் பண்ணையாளர்கள்.
நமீதா இப்படி ஒரு அசைவ பிரசாதத்தை கொடுத்து ஒரு வாரம் ஆவதற்குள் அவரைப்போலவே கோவை பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ஈமூ வளர்க்க சொல்லியிருக்கிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா.
நடமாடும் கறிக்கடைகளாக இவர்கள் மாறி மாறி கோவை, ஈரோடு பகுதிகளுக்கு விசிட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். கோழி விக்குதோ இல்லையோ? இவர்களை பார்க்க வரும் இளைஞர்கள் புண்ணியத்தில் குவார்ட்டர் விற்பனை அமோகமாம்!

No comments:

Post a Comment