Friday, June 15, 2012

காஜல் முதல் ஹன்சிகா வரை... நடக்குமா அதெல்லாம்!?

காஜல் முதல் ஹன்சிகா வரை... நடக்குமா அதெல்லாம்!?

அவரே சலிச்சு போகிற அளவுக்கு சல்லடையால் சலித்துக் கொண்டிருக்கிறார் கோடம்பாக்கத்தை. வேறு யார்? நம்ம எதிர்கட்சி தலைவர்தான்! மகனின் திரையுலக பிரவேசம் கிராண்ட் ஸ்வீட்டாக Hansika Motwani - kajal Agarwalஇருக்க வேண்டுமல்லவா, அதற்காகதான் இத்தனை மெனக்கெடல்.
சில மாதங்களுக்கு முன் இவரால் அழைக்கப்பட்ட இரு இயக்குனர்கள் தான் ஏ.ஆர்.முருகதாசும், பாலாஜி சக்திவேலும்! திட்டம் எது என்பதே தெரியாமல் போனவர்கள் முன்பு மகனின் எதிர்காலத்தை ஒப்படைக்கிற அளவுக்கு பேசினாராம் தலைவர். 'இப்போது சிரமம். போக போக கை கொடுக்கிறோம்' என்றார்களாம் இருவரும்.
இதற்கிடையில் மகனுடன் ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளுக்கும் வலை வீச ஆரம்பித்திருக்கிறது தலைவர் தரப்பு. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று நினைத்திருக்கலாம். தமிழ், தெலுங்கிலிருக்கும் டாப் மோஸ்ட் நடிகைகளுக்கெல்லாம் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காஜலில் ஆரம்பித்து ஹன்சிகா வரைக்கும் போனதாம் தூது. அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்பது இப்போதைக்கு தேவையில்லாத சமாச்சாரம்.

No comments:

Post a Comment