Friday, June 15, 2012

சிகரெட் விவகாரம்... சீறுகிறார் முருகதாஸ்

சிகரெட் விவகாரம்...

Thuppakki சீறுகிறார் முருகதாஸ்

                                                                                                                                                                                              நீங்கள்         துப்பாக்கி        ரவையை மேலே எறிந்தால், முருகதாஸ் அந்த               துப்பாக்கியையே            பதிலுக்கு எறிவார் போலிருக்கிறது. திருப்பிக் கேட்டா தாங்க மாட்டே என்கிற மாதிரியே இருந்தது அவரது பதில். அண்மையில் எழுந்த சுருட்டு விவகாரத்திற்கு அணையுற நேரத்திலாவது ஒரு பதிலை சொல்லி அசர வைத்திருக்கிறார் மனுஷன்.
துப்பாக்கி பட போஸ்டரில் விஜய் சுருட்டு பிடிக்கிற மாதிரி ஒரு ஸ்டில்லை பார்த்து புகை விடாத குறையாக அதிர்ந்தது பா.ம.க ஏரியா. இந்த காட்சி படத்தில் இடம்பெற்றால் அவ்வளவுதான் என்று எச்சரித்தார் சின்ன டாக்டர். இதை தொடர்ந்து அந்த போஸ்டர்கள் ஒட்டுவதை நிறுத்திய முருகதாஸ் படத்தில் அதுபோன்ற காட்சிகள் இருக்காது என்று உத்தரவாதம் கொடுத்தார். இப்போது அது தொடர்பான மேலும் கொஞ்சம் விளக்கம் வந்திருக்கிறது அவரது வாயிலிருந்து. அது...
யாருடைய வற்புறுத்தலுக்கும் A.R.Murugadossபயந்து அந்த காட்சியை நீக்கல. ஆனால் இதை எல்லாம் அரசியல் ஆக்குறதுல எனக்கு உடன்பாடே கிடையாது. ஸ்மோக் பண்ணக் கூடாதுங்கிற பொறுப்பு இங்கே எல்லாருக்குமே வரணும். ஆனா இவ்வளவு பேசுறவங்க, போராடுறவங்க, சிகரெட் கம்பெனி முன்னே நின்னு அதை நிரந்தரமா மூடச் சொல்லி போராடலாமே? எந்த கட்சி தன் ஆட்சியில் சிகரெட்டை தடை பண்ணுதோ, அடுத்த தேர்தல்ல அந்த கட்சியோடதான் கூட்டணின்னு சொல்லலாமே? அப்படியெல்லாம் சொல்ல மாட்டேங்கிறாங்க. ஒரு போஸ்டர் ஒட்டினா கோபப்படுறாங்க. அதுதான் ஆச்சர்யம்.
முருகதாஸ் கேள்விக்கு உருப்படியான பதில் இருக்கிறதா டாக்டர்ஸ்?

No comments:

Post a Comment